Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 19, 2016

காது குடையும் போது நீங்கள் செய்யும் தவறுகள்


தினமும் காது குடைந்து அழுக்கை எடுப்பது பெரிய தவறு. நீங்கள் தினமும் காது குடைந்து அழுக்கை எடுக்கவே தேவை இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில், காதில் நீங்கள் அழுக்கு என்று எண்ணி சுத்தம் செய்பவை தான் உண்மையில் காதுகளை பாதுகாக்கும் ஆண்டி-பாக்டீரியா ஆகும். எனவே, இதை முதலில் நீங்கள் சரி செய்துக் கொள்ள வேண்டும். பிறகு, காதுக்குள் தினமும் உறங்கும் போது பஞ்சை வைத்துக் கொள்வது, கண்டதை விட்டு காதுகளை நோண்டுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. காதில் பெரும்பாலும் இறந்த சரும செல்கள் தான் அழுக்கு போன்று படிந்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை, லைசோசைம் (lysozyme) எனப்படும் ஆண்டி-பாக்டீரியல் என்சைம் ஆகும்.

உண்மையில் நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்வது காதுகளுக்கு நல்லது என எண்ண வேண்டாம். உண்மையில் இந்த லைசோசைம்கள் தான் காதுகளை பாதுகாக்கின்றன என மேலும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் குளிக்கும் போது காதுகளின் மேற்புறத்தில் நீர் ஊற்றி கழுவி, மென்மையான துணியைக் கொண்டு காதின் மேற்புறத்தில் மட்டும் சுத்தம் செய்தாலே போதுமானது.

சிலர் காதுக்குள் அழுக்கு போகாமல் இருக்கவும், குளிர் காலத்தின் போதும் கூட பஞ்சு வைத்துக் கொள்வார்கள். ஒருவேளை அந்த பஞ்சு காதின் உட்பகுதிக்குள் சென்றுவிட்டால் அதை மருத்துவ முறையை கையாண்டு அகற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும், காதுக்குரும்பி (Ear wax) எனப்படுவதை இது காதினுள்ளே அடைப்பு போலே உண்டாக செய்கிறது. இது செவிப்பறையை பாதிக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிலர் காது குடைவதை சுகமான வேலையாக செய்து வருவார்கள். பேனா, கறிவேப்பிலை குச்சி, விரல் நகம், போன்றவற்றை பயன்படுத்தி காது குடைவார்கள். உண்மையில் இது சுகமாக இருப்பினும், காதின் உள்ளே இருக்கும் சருமத்தை அதிகமாக எளிதாக பாதிக்கின்றனர் என்பது தான் உண்மை.

சிலர் காதை நன்கு கழுவுகிறேன் என்ற பெயரில் காதினுள்ளே தண்ணீரை நேராக ஊற்றிக் கொள்வார்கள். ஆனால், அதே சமயம் உள்ளே ஊற்றிய தண்ணீர் முழுதுமாக காய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். இப்படி நீரை நீராக காதினுள் ஊற்றி கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லவே இல்லை.

காது குடைய பின்னூசி, பெண்கள் பயன்படுத்தும் ஹேர் பின் போன்றவற்றை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். இது செவிப்பறை மற்றும் காதின் உட்பகுதியில் இருக்கும் மிருதுவான சருமத்தில் எளிதாக கிழிசல் உண்டாக்கிவிடும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.