Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 14, 2016

செங்கம் அருகே பரபரப்பு: குடிபோதையில் மகளை கொன்ற கொடூர தந்தை


குடிபோதையில் மகளை கொன்ற தந்தையிடம் செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி(35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சசிகலா(28). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். மகள் உமா(8) 4ம் வகுப்பு படித்து வந்தாள். சசிகலா சவுதிஅரேபியாவில் வேலை செய்து வருகிறார். ரஜினி அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். நேற்றுமுன்தினம் இரவும் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வந்த ரஜினி குடிபோதையில் மகள் உமாவை தூக்கி கீழே போட்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த உமாவை செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட உமா நேற்று மதியம் இறந்தாள். இதுகுறித்து, செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினியை பிடித்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.