தனது ஏழ்மையான சூழ்நிலையிலும் தன் மகன் யுவராஜ் ஆசையோடு கேட்டபடி கைக்கடிகாரம் ஒன்றை வாங்கி வந்த கணேசன், யுவராஜை அழைத்து கைக்கடிகாரத்தைக் கொடுத்தார்.
கைக்கடிகாரத்தை வாங்கி பார்த்த யுவராஜ், ""அப்பா! இந்த விலை மலிவான கைக்கடிகாரம் எனக்கு வேண்டாம்! நான் இதைக் கட்டிக் கொள்ள மாட்டேன்!'' என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டான்.
யுவராஜ் சொன்னதைக் கேட்ட அவனது தந்தையின் முகமே வாடிவிட்டது. இருப்பினும், அவர் மகன் மீதுள்ள பாசத்தால், சிறிதும் கோபம் கொள்ளவில்லை.
""யுவராஜ் உனக்கு சீக்கிரமே விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை வாங்கி தருகிறேன்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
நடந்தவற்றையெல்லாம் யுவராஜின் தாத்தா கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் பேரனின் போக்கு மனவருத்தத்தை அளித்தது.
மாலையில் யுவராஜ் பள்ளிவிட்டு வந்தான்.
""யுவராஜ்! கோயிலுக்குச் சென்று வரலாம்... வர்றியா?'' என்று கேட்டார் அவனது தாத்தா.
கோவிலுக்குச் சென்று விட்டு வரும் போதெல்லாம் தாத்தா தனக்கு ஏதேனும் தின்பண்டம் வாங்கித் தருவார் என்று யுவராஜுக்கு தெரியும். எனவே அவன், ""சரி!'' என்று தாத்தாவுடன் உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றான்.
யுவராஜும், அவனது தாத்தாவும் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். கோவில் வாசலில் இரண்டு சாதுக்கள் அமர்ந்திருந்தனர்.
தாத்தா இரண்டு, ஐந்து, ரூபாய் நாணயங்களை எடுத்து தன் பேரனின் பார்வையில் படும்படி அந்த சாதுக்களிடம் கொடுத்தார். அவர்கள் தாத்தாவைப் பார்த்து, ""நீங்க நல்லாயிருக்கணும் ஐயா!'' என்று வாழ்த்தியபடி காசைப் பெற்றுக் கொண்டனர்.
பிறகு அவர் பேரனிடம், இரண்டு ஐம்பது காசு நாணயங்களைக் கொடுத்து, இரண்டு சாதுக்களிடமும் கொடுக்கச் சொன்னார். தாத்தா சொன்னபடியே, சாதுக்களிடம் நாணயங்களைக் கொடுத்தான்.
அவர்கள் அவனை பார்த்து, ""தம்பி! நீ நல்லாயிருக்கணும்!'' என்று வாயார வாழ்த்தினர். பிறகு இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
அப்போது தாத்தா, ""யுவராஜ்! நான் ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்த போதும், அந்த சாதுக்கள் என்னை வாழ்த்தினர். நீ ஐம்பது காசு கொடுத்தபோதும் உன்னை வாழ்த்தினர். கவனித்தாயா?'' என்று கேட்டார்.
""ஆமாம் தாத்தா! இதை எதற்காகக் கேட்கிறீர்கள்?'' என்று புரியாமல் தாத்தாவைப் பார்த்தான் யுவராஜ்.
""யுவராஜ்! நாம் தானம் செய்வது எவ்வளவு பணம் என்று கணக்குப் பார்த்து அவர்கள் நம்மை வாழ்த்தவில்லை. எவ்வளவு தானம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை. அன்போடு தானம் செய்பவர்கள் அனைவரையுமே அவர்கள் வாழ்த்துகின்றனர். நமக்கு யார் எந்தப் பொருளை அன்பளிப்பாகத் தந்தாலும், அதன் விலையைப் பார்க்கக்கூடாது. அவர்கள் நம் மீது வைத்துள்ள அன்பையே பார்க்க வேண்டும்... அப்போதுதான் அந்தப் பொருளின் உண்மையான மதிப்பை உணரமுடியும்!'' என்று சொல்லிவிட்டு, பேரனின் முகத்தைப் பார்த்தார்.
யுவராஜ் மனதில் காலையில் தந்தை தனக்காக வாங்கித் தந்த கைக்கடிகாரம் நினைவில் வந்தது. தன் மீதுள்ள அன்பால் அப்பா வாங்கித் தந்த கைக்கடிகாரத்தைப் பிடிக்கவில்லை என்று நிராகரித்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. சற்று நேரத்தில் அவனது மனதில் பெரிய மாற்றம் உண்டானது.
""தாத்தா! அப்பா மிகுந்த சிரமத்திலும் எனக்காக வாங்கித் தந்த கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொள்ள மாட்டேன் என்று சொன்னேன். அப்பா என் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்து கொள்ளாமல் அப்பாவின் மனதை வருந்தச் செய்துவிட்டேன். இப்போது நான் என் தவறைப் புரிந்து கொண்டேன். வீட்டிற்குச் சென்றவுடனே அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, நாளையிலிருந்து அப்பா வாங்கி தந்த கைக்கடிகாரத்தையே பள்ளிக்குக் கட்டிக் கொண்டு செல்வேன்! இனி அப்பா வாங்கி தரும் எளிய பொருளுக்கும் நன்றியோடு நடந்து கொள்வேன்,'' என்று சொன்னான் யுவராஜ்.
அதைக்கேட்ட தாத்தா, ""யுவராஜ்! உன்னுடைய நல்ல மனமாற்றத்திற்காக, இன்று உனக்கு இரண்டு சாக்லெட்டுகள் வாங்கித் தருகிறேன்,'' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.
***

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.