Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 18, 2016

வேண்டாம் பாட்டில் தண்ணீர்: மத்திய அரசு வேண்டுகோள்


'பாட்டில் தண்ணீரை பயன்படுத்துவதால், 30 சதவீதம் வரை தண்ணீர் வீணாகிறது; அதை தவிர்க்க வேண்டும்' என, மத்திய அரசு துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கடுமையான கோடை காரணமாக, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், கடும் வறட்சி ஏற்பட்டு, குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடிநீரை சேமிப்பது பற்றியும், வீணாக்காமல் பயன்படுத்துவது பற்றியும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

மத்திய அரசின் சார்பிலான துறை சார்ந்த கூட்டங்கள், அமைச்சக அதிகாரிகள் கூட்டங்களில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் நடத்தப்படுகின்றன. சமீபத்தில், நடந்த பார்லிமென்ட் அமைச்சக கூட்டத்தில், பங்கேற்றவர்களுக்கு, சிற்றுண்டி, தேனீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆனால், குடிநீர் பாட்டில்கள் மட்டும் வழங்கப்படவில்லை. தேவைப்படுபவர்கள், கிளாசில் வாங்கி குடித்துக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பார்லிமென்ட் விவகாரத் துறையின் சார்பில், மற்ற அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது;

அதில் கூறியுள்ளதாவது:
பாட்டில்கள் மூலம் விற்கப்படும், குடிநீரில், 30 சதவீதம் வரை, வீணாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேவைக்கு, அதிகமான தண்ணீரை, குடிக்காமல், பாட்டிலிலேயே விட்டுச் செல்கின்றனர். அந்த தண்ணீர் முழுவதும் வீணாகிறது. எனவே, முடிந்தவரை, பாட்டில் மூலம் தண்ணீர் வழங்குவதை, கைவிட வேண்டும்; அதற்கு மாற்றாக, கிளாஸ்களில் தண்ணீர் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.