Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

கண்ணா இனிமேதான் மெயின் பிக்சர்.... மே 4 முதல் 28 வரை அக்னி நட்சத்திரம்!


அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. சாலைகளில் நடந்து செல்லும் மக்கள், வெயிலின் கோரப்பிடியில் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு உடலில் வியர்க்குரு ஏற்பட்டு பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் 4ம் தேதி தாெடங்குகிறது. இது தொடர்பாக வானிலை  ஆய்வு மையம் தெரிவிக்கையில், மேற்கு திசையில் இருந்து காற்று வீசியதாலும் கடல் காற்று உருவாக தாம தித்ததாலும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த வாரத்தில் அதிகமாக காணப்பட்டது. அப்போது அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி வெயில் பதிவானது. அதன் பிறகு தெற்கு, தென் கிழக்கு பகுதியில் இருந்து ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கியதையடுத்து வெப்பத் தாக்கம் சற்று குறையத்  தொடங்கியது. ஆனாலும் சராசரியாக 98 டிகிரி முதல் 100 டிகிரிவரை பதிவாகி வருகிறது.

இன்னும் ஒரு சில நாட் களுக்கு இதே வெப்ப நிலை நீடிக்கும். பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல்,   கோவை, திருச்சி, மதுரை, அரியலூர் உள்ளிட்ட   உள் மாவட்டங்களில்  வெப்ப சலனத்தினால்  ஒரு சில இடங்களில் மழை பெய்யும். நேற்று அதிகபட்சமாக கரூர், பரமத்தி வேலூரில் 107 டிகிரி  வெயில் பதிவானது. 10 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. அக்னி நட்சத்திரம்  தொடங்கிய பிறகு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

அக்னி நட்சத்திரம் எனப் படும் கத்திரி வெயில் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. மே 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் 2 நாட்களே இருப்பதால்,  வெயிலின் தாக்கம்  அதிகரிக்க தொடங்கியுள்ளது" என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.