Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2016

'அட... மதுரையைச் சுத்தி 10 தொகுதில தி.மு.க. தோக்குதுங்க..!' - ஆவேச அழகிரி


 மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க தோல்வி அடையும் என மு.க. அழகிரி கூறியுள்ளார்.

தி.மு.க.வின் முன்னாள் தென் மண்டல பொறுப்பாளர் மு.க.அழகிரி. இவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வந்தார்.

இந்நிலையில்,  தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது, அழகிரி மீண்டும் தி.மு.க.வில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால்  அழகிரியோ, இது மகனுக்கும், தந்தைக்குமான சந்திப்பு என ஒரே வரியில் பதிலளித்ததை தொடர்ந்து, அந்த பரபரப்பு அத்துடன் அடங்கிப்போனது.

இந்நிலையில், மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் தி.மு.க. தோல்வி அடையும் என அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்று அவர் அளித்த பேட்டியில், ''ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நான் பேசி குறைந்தது 3 வருடங்களாவது இருக்கும். அவர்களிடம் பேசுவதற்கு எந்தவிதமான வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை.

என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தி.மு.க.வுக்கு தெரியவில்லை. எனவே, அக்கட்சி குறித்து கருத்து ஏதேனும் சொல்ல விரும்பவில்லை. இதுபோன்ற அரசியலில் ஆர்வம் காட்டவும் நான் விரும்பவில்லை.

ஆனால், மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறப்போவதில்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். அதே நேரத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில், நான் எந்த கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.