66 ஆண்டு கால வரலாறு கொண்ட தி.மு.க., எங்களது தேர்தல் அறிக்கையை திருடி வெளியிட்டுள்ளது என்று பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தனது பிரசாரத்தில் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி தொகுதி பா.ம.க. வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ''பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு குறித்து நான் முதல் கையெழுத்து போடுவேன்.
66 ஆண்டு கால வரலாறு கொண்ட தி.மு.க. எங்களது தேர்தல் அறிக்கையை திருடி வெளியிட்டுள்ளது. தி.மு.க.வுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அதேபோல் காங்கிரஸ். பா.ஜ.க. கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
தங்களது சுயலாபத்துக்காக அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் மதுக்கடைகளை திறந்து, பல லட்சம் பேரின் உயிர் போவதற்கு காரணமாக உள்ளனர். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் உறவினர்கள் மது ஆலைகளை நடத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக இருவரும் மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர். மதுவிலக்கு குறித்து பேச இருவருக்கும் அருகதை இல்லை.
அதுமட்டுமல்லாமல் தொழில் துறையில் 26-வது இடத்தில் உள்ள தமிழகத்தை முதல் இடத்துக்கு கொண்டு வருவோம். பா.ம.க. ஆட்சி அமைந்ததும் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவோம். வேளாண் துறையை மேம்படுத்த 3 சிறப்பு அமைச்சகங்களை உருவாக்குவோம். பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும் விதத்தில் அரசாணை வெளியிடுவோம்" என்றார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.