டில்லியில் உள்ள பிரபல ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிரபல ஆங்கில நாளிதழான, 'டைம்ஸ் ஆப் இந்தியா'வின், டில்லி அலுவலகத்தின், நான்காவது மாடியில், நேற்று, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், 21 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன.
முதல்கட்டமாக, அலுவலகத்தில் சிக்கியிருந்த ஊழியர்களை, தீயணைப்பு வீரர்கள், பத்திரமாக மீட்டனர்; பின், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின், தீ, அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.