ஒரு ஊரில் தீனா என்பவன் இருந்தான். அவன் உடல்வலிமை இல்லாதவன். உடல்வலிமை இல்லாவிட்டாலும் அறிவாளி. அவனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களுக்கு உடற் பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. சிலம்பு ஆட்டம், குஸ்திச் சண்டை, எடை தூக்குதல் முதலியவற்றை முறையுடன் பயின்று வந்தனர். தீனா பாவம் வேடிக்கை பார்ப்பதைத் தவிர எந்த கருவிகளையும் அவனால் தூக்க முடியவில்லை. இதனால் நண்பர்கள் அவனை, "நோஞ்சான்' என்று கேலி செய்து மகிழ்ந்தனர்.
ஒருநாள் மாலை வேளை, தீனா கடையில் இருந்து மளிகைச் சாமான் மூட்டைகளை ஒரு சிறு வண்டியில் வைத்து மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து வந்து கொண்டிருந்தான். அவன் வந்து கொண்டிருந்த வழியில் ஒரு பெரிய மேடு இருந்தது. அந்த மேட்டின் மேல் வண்டியை இழுப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. என்ன செய்வதென்று யோசித்தான். யாராவது வருகிறார்களா.... என்று வண்டியை நிறுத்தி விட்டு மேட்டின் மேல் ஏறிப்பார்த்தான்.
அப்போது அவனுடைய மூன்று நண்பர்களும் வந்து கொண்டிருந்தனர். உடனே, தீனாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
கீழே இறங்கி, தான் வைத்திருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். மற்றொரு முனையை கையில் எடுத்துக் கொண்டு, மேட்டின் மேல் ஏறி நண்பர்களை பார்த்து, ""விளையாடலாம் வாருங்கள். நீங்கள் மூவரும் ஒரு பக்கம் இழுங்கள், நான் எதிர்புறமாக இழுக்கிறேன்,''என்றான்.
அந்த மூன்று நண்பர்களும், "கொல்' என்று சிரித்துவிட்டனர்.
உடனே தீனா, ""சிரிப்பு இருக்கட்டும் இழுங்கள்,'' என்றான்.
மூவரும் கயிற்றை இழுத்தனர். தீனா முழு பலத்துடன் எதிர்ப்பக்கம் இழுப்பது போல நடித்தான். மூவருக்கும் இழுப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. போயும், போயும் இவனிடம் தோற்றுவிடப் போகிறோமே... என்ற பயத்துடன் முழு பலம் கொண்டு இழுத்தனர்.
தீனா சிறிது சிறிதாக கயிற்றை விட்டுக் கொண்டே இருந்தான். சபாஷ்... பையன் நகர்கிறான் என்று மூவரும் வேகமாக இழுத்தனர். அதற்குள் வண்டியை பாதிக்கு மேல் இழுத்து விட்டனர்.
கடைசியாக வண்டி முழுவதும் மேலே வந்தது கண்ட மூவருக்கும் விஷயம் புரிந்தது. தீனா வயிறு வலிக்க சிரித்தான். மூவரும் முகத்தில் அசடு வழிய நின்று கொண்டிருந்தனர்.
இதன் மூலம் என்ன தெரிகிறது?
உடல் வலிமை மட்டும் இருந்தால் போதாது, அறிவும், புத்திசாலித்தனமும் இருக்க வேண்டும். அப்போதுதான் எதையும் சாதிக்க முடியும் குட்டீஸ்...

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.