Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2016

ஜெ. கூட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது!


நெல்லையில் இன்று (12-ம் தேதி) நடந்த ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலியானதையடுத்து, ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் (ஏப்ரல்) 11-ம் தேதி விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டபோது, கருணாகரன் மற்றும் ராதாகிருஷ்ணன் என்ற இரண்டு பேர் மயங்கி விழுந்து பலியாகினர். அதேபோல், கடந்த மாதம் 20-ம் தேதி சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தின்போதும் பச்சியண்ணன் மற்றும் பெரியசாமிரென்ற இருவர் மயங்கி விழுந்து பலியாகினர். மேலும், அருப்புக்கோட்டை, மதுரையில் தலா ஒருவர் என ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (12-ம் தேதி) நெல்லையில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், புளியங்குடியைச் சேர்ந்த தேவநாடார் என்பவரது மகன் ராஜாமணி என்பவர் கலந்து கொண்டார். பிரசார கூட்டத்தின்போது, ராஜாமணி திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். இதையடுத்து, அவரை உடனடியாக பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றிருக்கின்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ராஜாமணி உயிரிழப்புடன் சேர்த்து, ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை, ஜெயலலிதா கடுமையான வெயில் நேரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். எனவே, வெயிலின் கொடுமை தாங்காமல்தான் கூட்டத்திற்கு வருபவர்கள் மயங்கி விழுந்து இறக்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், நெல்லையில், கடந்த இரு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. இருப்பினும் ஒருவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.