Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

சுலபமாக செய்யக்கூடிய தயிர் இட்லி


தேவையான பொருட்கள் :

இட்லி மாவு - 2 கப்,
புளிக்காத தயிர் - 1 கப்
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

அரைக்க :

தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
முந்திரிப்பருப்பு - 6.

தாளிக்க :

கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :

* மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள்.

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளித்து தயிரில் கொட்டி உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.

* பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி  கெத்தமல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம்.

* அல்லது வெறும் கொத்தமல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.

* இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.