Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2016

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்கள் பலாத்காரம்.. ரகசிய வீடியோவால் அம்பலமான "சாமியார்"!


குழந்தை பாக்கியம் தருவதாக கூறி ஆசிரமத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஹராய் கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வருபவர் ராம் சங்கர் திவாரி. இவர் தனது பெயரை பரமானந்த பாபா என்று கூறிக்கொண்டு ஆசிரமம் நடத்தி வந்தார்.

பெண்கள் மீது மோகம் கொண்ட வயது முதிர்ந்த இந்த சாமியார், அதற்காக தேர்ந்தெடுத்தது குழந்தையில்லாத பெண்களையாகும்.

வசீகர பேச்சு

குழந்தையின்றி மனமுடைந்து வரும் பெண்களை வசீகரிக்கும் வகையில் பேசி, குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பரிகார பூஜை செய்ய ஒப்புக்கொள்ள வைப்பாராம், திவாரி.

சம்மதிக்க வைத்து

இதன்பிறகு, தன்னோடு பாலியல் உறவு வைத்துக்கொண்டால் குழந்தை கிடைக்கும் என்று அந்த பெண்களை நம்ப வைத்து, அவர்கள் சம்மதத்தோடு உறவு வைத்துக்கொள்வாராம்.

சிசிடிவி கேமரா

வீட்டு மேற்கூரையில் ரகசிய கேமராவை பொருத்திக்கொள்ளும், திவாரி, விதவிதமான பெண்களுடன், தான் உடலுறவு கொள்ளும் காட்சிகளை பிறகு வீடியோவாக பார்த்து ரசிப்பது வழக்கமாம்.

மூச் விடக்கூடாது

உடலுறவு கொண்ட பெண்களிடம் இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டே வெளியே அனுப்பி வந்துள்ளார் திவாரி. ஆனால் சில பெண்கள் பின்னர் இதுகுறித்து, வெளியே கூறினர்.

வெளியான வீடியோ

ஆனால், அந்த புகார்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் திவாரியின் பித்தலாட்டம் வெளியுலகுக்கு தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், சில பெண்களுடன் இவர் ஆபாசமான நிலையில் உள்ள வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

கைது

இதுதொடர்பான ஆதாரத்துடன் போலீசாரிடம் உள்ளூரை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அந்த போலி சாமியாரை இன்று கைது செய்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பலான சிடிகள் பறிமுதல்

ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஆபாச வீடியோக்களும், ஆபாச புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில், அவர் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளது தெரியவந்துள்ளது.  

படம் பார்த்து பலாத்காரம்

தான், Basic Instinct என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் பெரிய விசிறி என்று போலீஸ் விசாரணையில் திவாரி தெரிவித்துள்ளார். அந்த படத்தின் பாதிப்பில் பல பலாத்காரங்களை செய்ததாகவும் கூறியுள்ளார்.

1 comment:

  1. என்ன காரணத்திற்காக பெண்கள் சென்றார்களோ அந்த வேலையை சரியாக பார்த்து இருக்கிறான்...குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் கணவர்... மருத்துவம் செய்ய முடியாததை இந்த சாமியார் எந்த நேர் வழியில் செய்வான் என்று (தவறான வழி தவிர)நம்பி செல்கிறார்கள்...

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.