Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2016

ஒரு ரூபாயில் ஆட்டோ சவாரி; ஜெ., பதவியேற்புக்கு ஜே!(வீடியோ இணைப்பு )


தமிழக முதல்வராக ஜெ., பதவியேற்றதை முன்னிட்டு, கோவையில், ஆட்டோ டிரைவர் ஒருவர், பயணிகளின் சவாரிக்கு, ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்து வியப்பை ஏற்படுத்தினார்.
கோவை சிங்காநல்லுார், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்தவர் மதிவாணன், 61; சிங்காநல்லுாரில், ஆட்டோ ஓட்டி வருகிறார். அ.தி.மு.க., உறுப்பினரான இவர், நேற்று, தமிழக முதல்வராக ஜெ., பதவியேற்றதை முன்னிட்டு, தன் ஆட்டோவில் பயணித்த பயணிகளிடம், கட்டணமாக, ஒரு ரூபாய் மட்டுமே வசூலித்தார்.
'ஒரு ரூபாய் கட்டணம் மட்டும் போதும்' என்ற ஸ்டிக்கரும், ஆட்டோவில் ஒட்டியிருந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் பலர், இவரது ஆட்டோவில் பயணம் செய்ய முன்வந்தனர். நேற்றிரவு வரை, 200க்கும் மேற்பட்டோர், இவரது ஆட்டோவில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, மதிவாணன் கூறியதாவது:
அ.தி.மு.க., உறுப்பினரான நான், 1975ம் ஆண்டு முதல், ஆட்டோ
ஓட்டி வருகிறேன். நேர்மையான வேலை, நியாயமான சம்பளம் என்ற கொள்கையுடன் பணிபுரிகிறேன்.
என் மகள்களுக்கு திருமணம் செய்து விட்டதால், பெரிய செலவுகள் இல்லை. அதனால், நான் தினமும் சம்பாதிக்கும் தொகையில், குறிப்பிட்ட அளவு, பொதுநலனுக்காக செலவிடுகிறேன்.
என்னுடன் பணிபுரியும் சக டிரைவர்களது குடும்பத்தில், ஏதேனும் துக்க நிகழ்வு நடந்தால், அதில் பங்கேற்பதோடு, இறுதிச் சடங்குக்கு, என்னால் முடிந்த தொகையை கொடுத்து விடுவேன்.
முதல்வராக ஜெ., பதவியேற்ற சந்தோஷத்தில், இன்று (நேற்று) பயணிகளிடம் ஒரு ரூபாய் வசூலித்தது, மன நிறைவை ஏற்படுத்தியது. இவ்வாறு, மதிவாணன் கூறினார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.