Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 12, 2016

கோ-எட் பள்ளி மாணவர்கள் நன்றாக படிக்கிறார்களா? - ஆய்வு சொல்லும் ஆச்சர்ய தகவல்!


தமிழகத்தில், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட, 'இருபாலர்'களும் படிக்கும் பள்ளி மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக சொல்கிறது ஓர் ஆய்வு.
'ரிப்போர்ட் பீ' எனப்படும் தனியார் அமைப்பு, கல்வித் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கல்வி முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
தமிழக அரசு நடத்தும், 10 வது மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், கடந்த நான்கு ஆண்டுகளின் தேர்ச்சி விகிதங்கள் குறித்து, இந்த அமைப்பு ஆய்வு செய்தது. 2012 முதல் 2015 வரையிலான தேர்ச்சி விகிதங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 2015 ம் ஆண்டில், பிளஸ் 2 தேர்வை, 6,258 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
இதில் ஆண்கள் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 59.8 சதவீதம். பெண்கள் பள்ளிகளில் படித்த மாணவியரின் தேர்ச்சி விகிதம், 66.2 சதவீதம். அதே நேரத்தில் இருபாலர் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி விகிதம், 63.6 சதவீதம். மாணவியரின் தேர்ச்சி விகிதம், 66.8 சதவீதம். பிளஸ் 2 தேர்வில், ஆண்கள் பள்ளியில் படித்த மாணவர்களைவிட, இருபாலின பள்ளியில் படித்த மாணவர்கள் தேர்ச்சி விகித வேறுபாடு, 5.3 சதவீதம் அதிகமாக உள்ளது.
அதே நேரத்தில் பெண்களிடம் இந்த வேறுபாடு வெறும், 0.6 சதவீதம் மட்டும்தானாம். கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல், திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், இரு பாலின பள்ளியில் படித்தவர்களை விட, ஆண்களுக்கான பள்ளியில் படித்த மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் இந்த மாவட்டங்களில், கல்வியறிவு விகிதம் மிக அதிகமாக உள்ளதுதான். 
அதே சமயம் மன அழுத்தம், ஒழுக்கம், வேலைக்குச் செல்வது, கட்டமைப்பு, விடலைப் பருவம் ஆகிய காரணங்களால், மாணவர்களின் படிப்புத் திறன் வேறுபடக் கூடும் என்கிறது  இந்த ஆய்வு.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.