Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2016

கனடாவில் காட்டுத்தீயால் நகரமே அழியும் ஆபத்து 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்


கனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காட்டில் தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன்காரணமாக அந்த காட்டின் அருகில் அமைந்துள்ள எண்ணெய் நகரமான போர்ட் மெக்முர்ரேயில் ஆயிரத்து 600 கட்டுமானங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

இந்த நிலையில் அங்கு வசித்து வந்த 80 ஆயிரம் பேர், வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் திணறுகின்றனர்.
அந்த நகரின் பெரும் பகுதி தீயில் அழிந்து விடும் ஆபத்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.