Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2016

வாடிக்கையாளர் மரணதிற்கு காரணமான உணவை வழங்கிய ஓட்டல் உரிமையாளருக்கு 6 வருடம் ஜெயில்


வாடிக்கையாளருக்கு வேர்க்கடலை கலந்த உணவு வழங்கியது அவரது மரணத்திற்கு காரணமானதாக கூறி பிரித்தானியாவில் ஹொட்டல் உரிமையாளருக்கு 6 ஆண்டுகள் சிறை வழங்கியுள்ளனர்.

இங்கிலாந்தில் முகமது ஜமான் என்ற இந்தியர் இந்திய உணவு வகைகளை மட்டுமே கொண்ட ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது ஓட்டலுக்கு வந்தபால் வில்சன் என்ற வாடிக்கையாளர் வேர்க்கடலை கலக்காத உணவு வேண்டுமென கூறி பணம் செலுத்தியுள்ளார். மேலும் வேர்க்கடலையால் தமக்கு ஒவ்வாமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்த ஓட்டல் உணவை வீட்டில் எடுத்துச் சென்று அருந்திய பால் வில்சன் தமது அறையிலேயே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த போலீசார், சம்பந்தப்பட்ட நபர் குறிப்பிட்ட நாளில் அருந்திய உணவு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த உணவில் வேர்க்கடலையின் அம்சம் அதிக அளவில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வடக்கு யார்க்‌ஷையர் பகுதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட ஓட்டல் உரிமையாளரை கைது செய்த லீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். லாப நோக்கம் கருதி பாதுகாப்பை பின்னுக்கு தள்ளியுள்ளதாக முகமது ஜமான் மீது நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர் தரப்பு ஜமான் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 ஆண்டு நடந்த இச்சம்வத்தின் வழக்கு விசாரணைகள் முடிவுக்கு வந்ததை அடுத்து இன்று தீர்ப்பினை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.