Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

உடலில் ஆற்றல் குறைவாக உள்ளதா? இதோ அதை அதிகரிக்க உதவும் சில உணவுப் பொருட்கள்!


இன்றைய அவசர உலகில் அதிகப்படியான வேலைப்பளுவினால் ஏராளமானோர் மிகவும் விரைவில் சோர்ந்துவிடுகின்றனர். ஆனால் சோர்வானது ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக இருந்தால், அதனை சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகி என்னவென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

அதுவே நீங்கள் அவ்வப்போது சோர்வை உணர்ந்தால், நீங்கள் ஒருநாளைக்கு உங்கள் உடலுக்கு வேண்டிய அளவு உணவை உட்கொள்வதில்லை என்று அர்த்தம். அதுமட்டுமின்றி தவறான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு வருகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

சிலர் உடலில் ஆற்றல் குறைவாக இருந்தால், கடைகளில் விற்கப்படும் உடனடியாக ஆற்றலை அதிகரிக்கும் பானங்களை வாங்கிப் பருகுவார்கள். இப்படி பருகினால், அதனால் உடலுக்கு பாதிப்புக்கள் தான் நேரும். ஆகவே உடலின் ஆற்றலை அதிகரிக்க கண்ட பொருட்களை உட்கொள்ளாமல், சரியான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.

சியா விதைகள்
பழங்காலத்தில் உடலின் சோர்வைப் போக்க பயன்படுத்தப்பட்டு வந்த பொருள் தான் சியா விதைகள். இந்த சியா விதைகள் ஃபளூடாவில் சேர்க்கப்படும். எனவே நீங்கள் மிகுந்த சோர்வை உணர்ந்தால், ஜூஸில் இந்த விதைகளை சேர்த்து பருகுங்கள். இதனால் உடலின் ஆற்றல் மேம்படும்.

வால்நட்ஸ்
சோர்வை உணரும் போது, வால்நட்ஸை உட்கொண்டு வந்தால், களைப்பு நீங்கி, சுறுசுறுப்புடன் நீண்ட நேரம் செயல்பட முடியும்.



ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே இதனை ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொள்ள, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, சோர்வு என்பதை சந்திக்க வேண்டி இருக்காது.

பீன்ஸ்
பலருக்கும் பீன்ஸ் உடலின் ஆற்றலை அதிகரிக்கும் என்று தெரியாமல் தவிர்த்து வருகின்றனர். ஆனால் மற்ற உணவுப் பொருட்களை விட பீன்ஸை உட்கொண்டால், உடலின் சக்தி உடனடியாக அதிகரிக்கும்.

பசலைக்கீரை
பசலைக்கீரையில் உள்ள சத்துக்கள், உடல் சோர்வை எதிர்த்துப் போராடும். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து தான் காரணம். எனவே நீங்கள் அடிக்கடி களைப்பை உணர்ந்தால், பசலைக்கீரையை உட்கொள்ளுங்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள் தனித்தன்மை வாய்ந்த உட்பொருட்கள், உடலுக்கு ஆற்றலை வழங்கும். எனவே அடிக்கடி சர்க்கரைவள்ளிக் கிழங்கை உட்கொண்டு, உடலின் சுறுசுறுப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அதிமதுரம்
பலருக்கும் அதிமதுர வேர் உடல் களைப்பைப் போக்கி, ஆற்றலை உடனடியாக வழங்கும் என்று தெரியாது. அதிமதுரத்தில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள், உடலின் ஆற்றலை வேகமாக அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.