Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

ரத்தக் கொதிப்பை குறைக்கும் விபரீத காரணி யோகா- தினம் ஒரு யோகா


ரத்த அழுத்தம் என்பது ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டத்தின் அளவு வழக்கத்தை விட அதிக அளவு இருந்தால் ஏற்படுவது ஆகும். இது உங்கள் உடலின் செயல்பாடுகளை பாதிக்கும். மிக அதிக அளவு ரத்த அழுத்தம் இருந்தால், இதயம், மூளை ஆகிய முக்கிய உறுப்புகளை பாதிக்கும்.

இயல்பான நிலையில் ரத்த அழுத்தம் 120/80 என கணக்கிடப்படுகிறது. ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு, இந்த அளவு 150/100 அல்லது அதற்கு மேல் கடந்து போகும்.

இந்த கோளாறு அபாயகரமானது. ரத்தக் கொதிப்பால், இதய நோய்கள், மூளை பாதிப்பு ஏற்படும். ரத்தக் கொதிப்பினை இரண்டாக பிரிக்கலாம்.

முதல்வகை ரத்தக் கொதிப்பு :
இது உணவுபழக்கம், குடிப்பழக்கம், மரபு ரீதியாக, மற்றும் வேலை அழுத்தம் காரணமாக சிலருக்கு வரும்.

இரண்டாம் நிலை ரத்தக் கொதிப்பு :
இது சிறுநீரகங்களை பாதிக்கும் போது, அல்லது நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் இந்த வகையான ரத்தக் கொதிப்பு ஏற்படும்.

ரத்தக் கொதிப்பினை சைலன்ட் கில்லர் என்று கூறுவார்கள். ஏனெனில் அது எப்போது வரும் என்றே சில சமயங்களில் கண்டுபிடிக்க இயலாது. பிரச்சனைகள் வந்தபின்தான் சிலருக்கு ரத்தக் கொதிப்பில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வரும்



ரத்த கொதிப்பு உள்ளவர்கள், மனதை மிகவும் அமைதியாக சூழ்நிலையில் வைத்திருப்பது மிக அவசியம். யோகா மிக அற்புதமான பலனைத் தரும். மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்தும் தியானமும் நல்ல முன்னேற்றத்தை உங்களுக்கு தரும்.

யோகா நிறைய நோய்களுக்கு தீர்வு தருகிறது. இதில் ரத்தக் கொதிப்பும் உள்ளடங்கும்.

விபரீத காரணி யோகா :
முதலில் சுவருக்கு எதிராக படுத்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சினை நன்றாக இழுத்து, விட வேண்டும். பின் இரு கால்களையும் தூக்கி, சுவற்றில் மேல் ஒட்டியபடி வையுங்கள்.

நேராக நெட்டுக் குத்தலாக உங்கள் கால்கள் சுவற்றில் இருக்கும்படி, உங்கள் பொஸிஷன் இருக்க வேண்டும். தலையையும் உடலையும் நேராக வைத்துக் கொள்ளுங்கள்.

10 நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும். பிறகு மெதுவாக கால்களை தாழ்த்தி பழைய நிலைக்கு வாருங்கள்.

உங்களுக்கு முதுகு மற்றும் இடுப்பு வலி இருந்தால், இடுப்பிற்கு, மிருதுவான தலையணை அல்லது துணியினை முட்டுக் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.