குடும்பத்தில் பிரச்சணை வரும் பொழுது அம்மா நம்மிடம் வந்து அழுவார்.ஆனால் அப்பா?,எங்கே சென்று அழுவார்?? அவரின் அழுகை கோபமாக தான் வெளிப்படும்,அந்த ஐந்து நிமிடம் நம்மை திட்டுவார்,இத்தனை வருடமாக நம்மை அனுசரித்து நமக்காக எல்லாம் செய்த அப்பவிற்காக அந்த ஐந்து நிமிடம் கூட நாம் நம் அப்பாவை அனுசரித்து போவதில்லை.
பன்னிரெண்டாம் வகுப்பு, காலை 9மணிக்கு ஆபீஸ் போன நம் அப்பா ,இரவு 7மணிக்கு தான் வருவார்.நாம் படித்து கொண்டு இருப்போம்.அப்பா வந்த களைப்பில் தூங்க மாட்டார்.எங்கே தான் தூங்கினால் அதை பார்க்கும் நம் மகனுக்கும் தூக்கம் வந்துவிடும் என்று எண்ணி தூங்க கூட மட்டார்.மாறாக நாம் படிக்கும் வரை நம் பக்கத்தில் ஒரு ஸ்டூலை போட்டு வார இதழ் படித்துக் கொண்டிருப்பார்.சரியாக 11மணிக்கு டீ போட்டு தருவார்.நாம் தூங்கிய பின்னர் தான் தூங்குவார்.ஆனால் நாம் எந்திர்க்கும் முன்னர் எந்திரித்து மார்கெட் போய் அம்மாவுக்கு காய்கறி வாங்கி வருவார்.எப்படி இவரால் இத்தனை வேலைகள் செய்ய முடிகிறது?..நம் அப்பா நமக்கு கிடைத்த வரம்.என் அப்பாவிற்க்கு நான் கொடுத்த முதல் மகிழ்ச்சி,+2 மார்க்.
என் அப்பாவுக்காக நாம் செய்த முதல் முயற்ச்சி.அன்று என் அப்பா பெற்ற மன நிறைவு இன்று வரை என் மனதில் இருக்கிறது.அதன் பின் என் அப்பாவிற்காக நான் எதயும் செய்யவில்லை.அம்மா என் மார்க்கை ஊர் முழுக்க சொல்ல,அப்பா கூறினார்,“சும்மா இரு,பையனுக்கு கண்ணு பட்டுட போகுது”,அது தான் அப்பா.
ஒரு இலக்கு இல்லாமல் படிக்கும் நம்மை ,நம் இலக்கு என்ன என்று உணர வைப்பவர் நம் அப்பா.கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்தது,அது வரை கொஞ்சமாவது பேசிக்கொண்டிருந்த நம் அப்பாவிடம் இருந்து நாம் பிரிய நேரிட்டது.அதன் பின் அம்மாவிடம் போனில் மணிக்ககில் பேசும் நாம் அப்பாவிடம் வாரத்தில் ஒரு முறை பேசினாலே அதிகம்.இப்பவும் கூட நாம் ஊருக்கு போனால் அம்மாவை பார்த்த உடனே கட்டி பிடித்து முத்தம் கொடுக்கிறோம்,ஆனால் நம் அப்பாவை பார்த்தால் ஒரு சிறு புன்னகை.அந்த நிமிடம் அப்பாவின் வலி நமக்கு தெரியாது,நீங்க அப்பாவான பின்ன உங்க மகனோ அல்லது மகளோ உங்களுக்கு செய்வான் அப்பொழுது புரியும் அந்த வலி,ஆனால் அப்பொழுது புரிந்து எந்த பயனும் இல்லை.
நமக்கு எழுத படிக்க சொல்லிக்கொடுத்தது நம் அப்பா,நல்லது கெட்டது சொல்லிகொடுத்தது நம் அப்பா,வாழ்க்கையை சொல்லிகொடுத்தது நம் அப்பா,ஒரு சாதாரண பேங்க் ஃபார்ம் கூட ஃபில்லப் பண்ண சொல்லிக்கொடுப்பவர் நம் அப்பா,அவரிடம் இருந்து நாம் கற்றவை அதிகம்.
தாடி வைப்பதில் இருந்து ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் வரை நாம் அப்பாவிடம் இருந்து கற்றவை அதிகம்.அப்படிபட்ட அப்பாவிடம் இருந்த்து ஏன் நாம் இவ்வளவு இடைவெளி காட்டுகிறோம்??.இப்பொழுது ஆண் பிள்ளைகளை விட பெண்கள் அப்பாவிடம் பாசமாக நெறுக்கமாக இருக்கிறார்கள்.உதாரணம்..நம்ம காலேஜ்லயே விடுமுறை நாட்க்களில் கேள்ஸ் ஹாஸ்டல் பக்கம் வந்து பாருங்கள்,எவவளவு பெண்கள் தங்கள் அப்பாவிடம் நெருக்கமாக இருக்கிரார்கள் என்று.அதை பார்த்து பல நாட்க்கள் நான் ஏங்கியதுண்டு.
சரி இவ்வளவு பேசும் நான் என் அப்பாவிடம் இருக்கும் இடைவெளியை குறைக்க ஏதாவது செய்து இருக்கிரேனா?? இல்லை..எந்த சக்தி அதை தடுக்கிறது,எது என் மனதை இவ்வளவு கல்லாக மாற்றியது..ஏன் என் அப்பாவிடம் பாசம் காட்ட தயக்கம் காட்டுகிறேன்??..இதை யோசித்தால் எனக்கு தலயே வெடித்துடும் போல இருக்கிறது. என் ஆதங்கத்தை,என் போல உள்ளவர்கள் இதை படித்து தன் அப்பாவின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்கி கொடுக்க மாட்டார்களா?? என்று எண்ணி தான் இதை நான் எழுதினேன்.
நான் எதுவும் என் அப்பாவிற்க்கு செய்யவில்லை,ஆனால் இப்பொழுது கூட நான் என் அப்பாவிற்க்கு போன் செய்தால் “அப்பா நல்லா இருக்கீங்களா,என்ன சாப்டீங்க”,என்று கூற மனம் என்னும்,ஆனால் உதடு தடுக்கும்,என் உதடு கேட்பது ,”அப்பா, ஒரு 500ரூபாய் என் அக்கவுன்ட்ல போட்டு விடுங்க”, என்பது தான்.ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் எந்த அப்பாவிடம் நான் பாசம் காட்ட நான் மறுத்தேனோ,அந்த அப்பாவின் பாசம் என் பேங்க் அக்கௌன்டில் “1000ரூபாயாக”,வந்து விழும்.அது தான் அப்பா பாசம்.அவர் நம்மிடம் எதயும் எதிர் பார்பதில்லை,நாம் வாழ்க்கையில் வெற்றி பெற தான் ஒவ்வொருவரிடமும் தோற்கிறார்,நமக்காக,நமக்காக மட்டுமே. “அப்பா நாம் மெத்தையில் படுக்க ,முள் வெளியில் உழைக்கும் ஜீவன்”.முடிந்தால் உணருங்கள் அவரை.அது ஒன்று போதும் அவர் மனம் நிறைவு அடைய.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.