Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2016

வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் தென்படும் அறிகுறிகள்.


கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, தன் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இருப்பினும் நம் நாட்டில் பெண் சிசுக் கொலை நடப்பதால், வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று பார்க்க நம் அரசு தடை செய்துள்ளது. இருந்தாலும், நம் முன்னோர்கள் அக்காலத்தில் ஒருசில அறிகுறிகளைக் கொண்டு வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று கணித்தனர்.
இவை மூடநம்பிக்கையாக இருந்தாலும், பெரும்பாலானோருக்கு முன்னோர்களின் கணிப்பு படி நடந்துள்ளது. இங்கு அந்த அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து, உங்கள் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
01. வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்கும்.
02.  கர்ப்பிணிகளின் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.
03. கர்ப்பமாக இருக்கும் போது முகப்பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம்.
04. கர்ப்பிணிகளின் வயிறு சிறியதாக காணப்பட்டால், வயிற்றில் ஆண் குழந்தை வளர்ந்து வருகிறது என்று அர்த்தம்.
05. வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கூந்தல் வளர்ச்சி அதிகம் இருக்கும்.
06. கர்ப்பிணிகளுக்கு புளிப்பான மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளின் மீது ஆசை எழுந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்று.
07. எவ்வளவு தான் க்ரீம்கள், எண்ணெய்கள் என்று சருமத்திற்கு தடவினாலும், சருமம் அதிகம் வறட்சி அடைய ஆரம்பித்தால், அதுவும் ஆண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.
இவைகள் நுாற்றுக்கு நுாறு வீதமான கணிப்புக்கள் கிடையாது ஆண் குழந்தையோ-பெண் குழந்தையோ அது இறைவனின் கையிலேயே உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.