Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

விளையாட்டு வினையானது'; செல்ஃபி எடுக்கப்போய் தலையில் சுட்டுக்கொண்ட பையன்



இந்தியாவின் வடக்கே, பஞ்சாப் மாநிலத்தில் பதின்ம வயது சிறுவன் ஒருவன், அவனது தந்தையின் கைத்துப்பாக்கியை தனது தலையில் வைத்தவாறு 'செல்ஃபி' எடுக்க முயன்றபோது தவறுதலாக தன்னைத் தானே சுட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
அந்த 15-வயது பையனுக்கு, பத்தான்கோட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.
கடந்த வெள்ளியன்று மாலை, தனது தந்தை உரிமம் வைத்திருக்கின்ற துப்பாக்கியை வைத்து அந்த பள்ளிச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ள போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்தப் பையனின் நிலைமை மோசமாக இல்லை என்று கூறப்படுகின்றது.
சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம், பின்னால் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது அதன் முன்பாக செல்ஃபி எடுக்க முயன்ற பதின்ம வயது இளைஞன் ஒருவன் ரயில் மோதி உயிரிழந்தான்.
உலகெங்கிலும் 2015-ம் ஆண்டில் நடந்த, செல்ஃபியுடன் தொடர்புடைய மரணங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை இந்தியாவிலேயே நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியைப் பகிர்க

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.