Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2016

கல்லூரி பேராசிரியர் கொலை : குற்றவாளி கைது



கோவை: கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி சாய்பாபா காலனி ராமலிங்கா நகர், 3வது  வீதியில் தனியாக வசித்து வந்தவரும், பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான  ராமு என்பவரை பணம் பொருளுக்காக ஆசைப்பட்டு கொடூரமாக கொலை செய்து அவர் அணிந்திருந்த 2 1/2 பவுன், தங்க  செயின், 1/2 பவுன் தங்க மோதிரம் மற்றும் பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

இச்சம்பவத்தில் அவர் தம்பி திருமூர்த்தி  கொடுத்த புகாரின் அடிப்படையில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இவ்வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க  கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், உத்திரவுப்படி, காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பு குற்றப்பிரிவு லட்சுமி நேரடி பார்வையில், காவல் உதவி ஆணையர்,  சட்டம் மற்றும் ஒழுங்கு, மத்திய உட்கோட்டம் ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மணிமொழி, சந்திரசேகரன் ஆகியோர்கள்  தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. புலன் விசாரணையில் குற்றவாளி மனோகர் (எ) சரவணன், (த/பெ.குணசேகரன், கதவு எண் 2/45 கவுண்டம்பாளையம், கோவை) என்பது கண்டறியப்பட்டது. அவரை திருப்பூர், திண்டுக்கல், மதுரை, பழனி, ஈரோடு, சேலம், சென்னை மற்றும் கேரளா, பெங்களுர் போன்ற பல இடங்களில் தேடி வந்தனர்.

 இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் பணியில் போலீஸார் முழுமையாக ஈடுபட்டிருப்பதை தெரிந்து கொண்டு,  கடந்த 20-ம் தேதி கோவை வந்த மனோகரனை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறப்பு படையினர் இனம் கண்டு,  சோமசுந்தர மில் இரயில் பாலத்தில் துரத்தி பிடிக்க எத்தனித்த போது, போலீஸார் கையில் சிக்காமல் தப்பித்து ஓடியவர் ரோட்டில் விழுந்து அடிபட்டார். அவரை சிகிச்சைக்காக போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 21.05.2016-ம் தேதி அவரை கைது செய்து விசாரித்ததில் சம்பவத்தில் கொள்ளையடித்த தங்க செயின் மற்றும் தங்க மோதிரம் மற்றும் வெள்ளி மோதிரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணையில் குற்றவாளியின் உண்மையான பெயர் சரவணன் என்பதும், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளதும், அவர் மீது கொலை முயற்சி மற்றும் ஆதாய கொள்ளை வழக்குகள் முறையே சென்னை, திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் பெரம்பூர், கொடுங்கையூர் காவல் நிலையங்களில் செயின் பறிப்பு வழக்குகள் பதியப்பட்டு தண்டனை பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் திருவொற்றியூர், திருமங்களம், மணலி காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகளிலும் இரண்டு முறை 'குண்டர்' தடுப்பு  காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டவர் என்பதும், மணலி காவல் நிலைய கொள்ளை வழக்குகளில் 7 வருட சிறை தண்டனை பெற்றவன் என்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலையாளியை கண்டுபிடித்து சொத்துக்களை மீட்ட தனிப்படையினரை கோவை மாநகர  காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.