என தன்னை வழிமறித்த பெண்ணிடம் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி ஸ்ரீநிவாசன் உறுதியளித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் களத்தில் உள்ளார்.
தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை என கலக்கி வரும் வானதிக்கு அத்தொகுதியில் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தெற்கு தொகுதிகுட்பட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட வானதியை வழிமறித்த இஸ்லாமிய பெண் ஒருவர், அவருடைய பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து வானதியிடம் முறையிட்டார். மேலும், அந்த பிரச்னைகளை தீர்ப்பதாக உறுதியளித்தால் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அப்பெண் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த வானதி, "என்னை தேர்ந்தெடுத்தால் உங்கள் பகுதியின் பிரச்னைகளுக்கு நிரந்தர தேர்வு காண வழிவகை செய்யப்படும். எந்த நேரத்தில் அழைத்தாலும் உதவி செய்யப்படும்" என உறுதி அளித்தார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.