May 31, 2016
தாம்பத்ய வாழ்க்கைக்கு கைகொடுக்கும் உணவுகள்
இன்றைய அவசர உலகில் மன அழுத்தமும், அலுவல் அழுத்தமும் பெரும்பாலான தம்பதியினரின் தாம்பத்ய வாழ்க்கையையே காலியாக்கி விடுகிறது. இந்த அவசர யுகத்தில்கூட சரியான உணவுகள் உண்டால், உடலின் ஆரோக்கியமும், பாலியல் ஈடுபாடும் குறைவின்றி இருக்கும். அதற்கு முதல் வேலையாக 'கெஃபீன்' (Caffeine) பொருட்களை ஒதுக்குங்கள். இது தாம்பத்ய ஆர்வத்தைக் குறைத்துவிடும். டீ, காபி போன்றவற்றில் இந்த கெஃபீன் அதிகம் உள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.
வைட்-டமின்-ஏ, இதற்கு ரொம்ப முக்கியம். இது உடலிலுள்ள எப்பிதீலியல் திசுக்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருகிறது. லிவர், முட்டை, சீஸ், பட்டர், கேரட்... இவற்றில் வைட்டமின்-ஏ அதிகம் உண்டு. இவற்றை அளவோடு உண்ண வேண்டியது அவசியம்.
வைட்டமின் சி, ஆண்களுக்கு நல்ல உணவு. தினமும் 500 முதல் 1,000 மில்லி கிராம் வரை வைட்டமின்-சி உடலில் சேர்ந்தால் உயிரணுக்கள் வலிமையடையும். திராட்சை,பெப்பர், ஸ்ட்ராபெரி, சிட்ரஸ் நிரம்பியுள்ள எலுமிச்சை போன்ற பழங்கள் வைட்டமின்-சி நிறைந்தவை.
ஸிங்க் சத்து, தாம்பத்யத்தின் ஹீரோ! உணவில் இதைச் சேர்த்துக் கொண்டால், பெண்களுக்கு தாம்பத்ய ஆர்வம் அதிகரிக்கும். ஆண்களுக்கு உயிரணுக்குள் வலிமையாகும். உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். சரி, கடல் சிப்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் கவலையே இல்லை. ஸிங்க் அதிகம் உள்ள ஒரு உணவு சிப்பி. சிப்பி என்றால் உவ்வேவா? கவலையில்லை சம்பா அரிசி, நல்ல பச்சை நிற கீரைகள், முழுக் கோதுமை பிரெட்... இவற்றிலெல்லாம் கூட ஸிங்க் சத்து உள்ளது.
'சொலீனியம்' எனும் பொருள், பெண்களின் கரு முட்டை வளர்ச்சிக்கும், ஆண்களின் உயிரணு வளர்ச்சிக்கும் நல்லது. அதிக கொழுப்பற்ற இறைச்சி, சம்பா அரிசி, ஓட்ஸ், முட்டை, வால்நட், முழு கோதுமை... இவற்றிலெல்லாம் இந்த சொலீனியம் உண்டு.
மாங்கனீஸ் சத்து, உடலின் ஆஸ்ட்ரோஜின் (Estrogen) சுரப்புக்கு நல்லது. குறிப்பாக, பெண்களின் தாய்மைப்பேறை இது ஊக்குவிக்கும். மாங்கனீஸ் குறைந்தால், குழந்தை பெறும் வாய்ப்பும் குறையத் துவங்கும். கீரை, முழு கோதுமை, அன்னாசிப் பழம், பீன்ஸ், பட்டாணி, முந்திரி... இவற்றிலெல்லாம் மாங்கனீஸ் சத்து உண்டு.
லினோலிக் ஆசிட், ஆண்கள் ஸ்பெஷல். குறிப்பாக குழந்தையின்மைக்குக் காரணம் உயிர் அணுக்கள் என்றால், லினோலிக் ஆசிட் நிரம்பிய உணவுகளைச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். முந்திரி, சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் ஆயில், சோயா ஆயில் போன்ற-வற்றில் இது அதிக அளவில் இருக்கிறது.
'ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்' உணவில் அதிக அளவு இருந்தால், தாம்பத்ய வாழ்வின் திருப்தி நிலைக்கு பயன்படும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் இவை அதிக அளவில் உண்டு. வெங்காயம், பூண்டு, கேரட், இஞ்சி, காய்ந்த முந்திரி போன்றவை உணவில் இருந்தால் தாம்பத்ய வாழ்க்கை சுகமாகும்
தாம்பத்ய வாழ்க்கைக்கு கைகொடுக்கும் உணவுகள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.