Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2016

விலைவாசி எப்படி ஏறுதுன்னு தெரியுமா?


விலைவாசி எப்படி ஏறுதுன்னு தெரிஞ்சுக்கணுமா. ?
டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்… எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டாங்க… சரியா?
டீச்சர் : (மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800… இந்த மாதம் புதுப் புடவை தான்…
பையன்:(வீட்டுக்கு வந்தவுடன்) அம்மா நாளைக்கு ஸ்கூல்ல ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்…
அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க…. சரி, சரி அழாதே… அப்பா வரட்டும்… கேக்கறேன்.
அப்பா வந்ததும்: என்னங்க… நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்… இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்…
அப்பா: க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாயா? பகல் கொள்ளை… என்ன செய்யிறது?… சட்டைப் பையில இருக்கு எடுத்துக்க….
இப்ப விலைவாசி எப்படி ஏறுதுன்னு புரியுதா? ..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.