Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2016

தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு:


தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.  அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா 6-வது முறையாக முதல்-அமைச்சராகிறார். பதவி ஏற்பு விழா வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார்.
இந்நிலையில், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அது வருமாறு:-
முதலமைச்சர் ஜெயலலிதா - உள்துறை, பொது ஆட்சிப்பணி, காவல்
ஓ.பன்னீர்செல்வம் - நிதி
எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை
திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை
பி.தங்கமணி - மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
செல்லூர் ராஜூ - கூட்டுறவு, தொழிலாளர் நலன்
எஸ்.பி. வேலுமணி - உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கம்.
டி.ஜெயக்குமார் - மீன்வளம்
சரோஜா - சத்துணவு மற்றும் சமுகநலம்
சி.வி.சண்முகம் - சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை
ஆர்.காமராஜ் - உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை
ஆர்.பி.உதயகுமார் - வருவாய்
உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி
கடம்பூர் ராஜு- தகவல் மற்றும் விளம்பரம்
ஓ.எஸ்.மணியன் - கைத்தறி, நெசவு.
கே.வி.கருப்பண்ணன் - சுற்றுச்சூழல்
கே.பி.அன்பழகன் - உயர்கல்வி
ஓ.எஸ்.மணியன் - ஜவுளி மறறும் கைத்தறி
விஜயபாஸ்கர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
எஸ்.பி.சண்முகநாதன் - பால்வளம்
எம்.சி. சம்பத் - தொழில்துறை
ராஜேந்திர பாலாஜி - ஊரகத் தொழில்துறை
பென்ஜமின் - கல்வி மற்றும் விளையாட்டுத் துறை
வளர்மதி (ஸ்ரீரங்கம்) - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை
துரைக்கண்ணு - விவசாயம், கால்நடை
மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்
ராஜலட்சுமி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
எம்.ஆர். விஜயபாஸ்கர் - போக்குவரத்து.
வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.