அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நோக்கி சென்ற விமானத்தில் பெண் ஒருவர் மதுவுக்காக தான் ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி என மிரட்டியுள்ளார்
அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் ஆரம்பம் முதலே சக பயணிகளை எரிச்சலூட்டம் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அந்த பெண்களில் ஒருவருக்கு பிறந்த நாள் என்பதால் அதை கொண்டாடவே அவர்கள் விமாணத்தில் பயணம் செய்துள்ளனர்.
சத்தமாக பாடல் வைத்து அட்டகாசம் செய்த அந்த பெண்கள் சக பயணிகளாலும், விமான ஊழியர்களாலும் பல முறை எச்சரிக்கப்பட்டனர். மேலும் விமானத்தில் அதிக மது கேட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அந்த பெண்கள்.
இந்நிலையில், கழிவறைக்கு சென்று திரும்பி வந்த அந்த பெண்களில் ஒருவர் தான் தற்கொலைப்படை தீவிரவாதி சக பயணிகளை மிரட்டினார். இதனால் பதற்றமான விமான ஊழியர்கள் இரண்டு பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதால் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடந்து விமானம் தரையிறங்கியதும் விமன நிலைய காவலர்கள் இரண்டு பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்களிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை எனவும், சக பயணிகளை அச்சுறுத்தவும், மது தராத விமான ஊழியர்களை மிரட்டவும் தான் அவர் தன்னை தற்கொலைப்படை தீவிரவாதி என கூறியதாக தெரியவந்துள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.