Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2016

பருவம் அடையும் பெண்களுக்கு என்னென்ன சொல்லி தரவேண்டும்?


பெண்பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம்.  இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் வரும்., அந்த சந்தேகங்களை தாய் தான் பொறுமையாக சொல்லித்தர வேண்டும்.  எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு, இதில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும். மாதவிலக்கு பற்றிய ஏதாவது கட்டுரைகள், தகவல்கள் இருந்தால் அதை அவர்களிடம் காட்டலாம். பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து சிறுமிகள் திகிலடைந்து விடுவார்கள். இது இயல்பு, இவ்வளவுரத்தம் வெளியேறும், அந்த சமயத்தில் தலையும், முதுகும் வலிக்கும், அவ்வப்போது முகம் வெளுத்தது போல இருக்கும், மனநிலையில் ஏற்ற இறக்கம், கோபம் சிடுசிடுப்பு போன்றவை இருக்கும் இதெல்லாம் இந்த சமயத்தில் வரும் அறிகுறிகள் என செர்லித் தரவேண்டும். அந்தரங்க சுத்தம் அவசியம் என்பதையும் அதற்கான காரணங்களையும் சொல்லித் தரவேண்டும். அதே சமயம் மாதவிலக்கு காலத்தில் கொஞ்சமாக சாப்பிடவேண்டும், அடிக்கடி குளிக்கக்கூடாது, எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும், படிக்கக்கூடாது, உடல் சார்ந்த எந்த வேலையையும் செய்யக்கூடாது, விளையாடக்கூடாது என்றெல்லாம் தப்புத் தப்பாக சொல்லித் தரக்கூடாது. எப்படி மாதவிலக்கு காலத்தில் சானிடரி அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும். மார்பக வளர்ச்சிக் காலத்தில் இறுக்கான ப்ராக்களை அணியக்கூடாது என்பன போன்ற சந்தேகங்களை தயங்காமல் சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.