Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 8, 2016

மைதானத்திலேயே உயிரிழந்தா கால்பந்தாட்ட வீரர் - வீடியோ


கேமரூன் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட நடுகள வீரர் பெட்ரிக் எகெங்,  தனது அணிக்காக விளையாடிய போது  மைதானத்திலேயே சுருண்டு விழுந்து, பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

டினாமோ புக்காரெஸ்ட் அணியைச் சேர்ந்த 26 வயதுடைய கால்ப்பந்தாட்ட வீரர்  பெட்ரிக் எகெங்  வீடொரல் கான்ஸ்டன்டா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில்,  தனது அணி சார்பில் 62ஆவது நிமிடத்தில் மாற்று போட்டியாளராக களமிறங்கினார்.

போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது மைதானத்திலேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார்.

இதன்பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்,  2 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளார்.  அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி புக்காரெஸ்ட் அணி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கால்ப்பந்தாட்ட வீரர் பெட்ரிக் கிளாட் எகெங்கை இன்றிரவு (நேற்று) இழந்து விட்டோம். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரின் சார்பிலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய கடவுள் அருள் புரியட்டும்" என தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு எகெங்கின் முன்னாள் அணியான கார்டோபாவும் டுவிட்டரில், பெட்ரிக் எகெங்கின் மரணத்திற்கு எங்களது சோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.