Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2016

மைத்துனரின் ஆணுறுப்பை அறுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பெண்


மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது மைத்துனரின் ஆணுறுப்பை அறுத்து அதை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் மைத்துனர் இருக்கும் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரின் கணவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணை மைத்துனர் பல முறை பாலியல் துஷ்பிரயோரம் செய்துள்ளதோடு. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப் பெண்ணின் சகோதரியையும் இரவில் துஷ்பிரயேகம் செய்ய முயன்றுள்ளார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த பெண் அரிவாளை எடுத்து மைத்துனரின் ஆணுறுப்பை துண்டாக வெட்டியுள்ளார். பின் வெட்டிய ஆணுருப்பு பாகத்துடன் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து பொலிஸார் அந்த பெண் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையே அந்த பெண்ணின் மைத்துனர் தனது வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதேவேளை குறித்த பெண்ணுக்கு மனநலம் சரியில்லை என்றும், அவர் தான் செய்த செயலுக்காக வருந்தவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.