நேற்றும் பீம்ராவுக்கு ஆதரவாக வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டை நடந்தது. இதில் தேமுதிகவினரும், பிற கட்சியினரும் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் அதிகம் காணப்பட்டனர். அதிலும் ஒருவர் ரொம்பவே தனித்துத் தெரிந்தார். அதிமுகவினர் போல ஏகப்பட்ட நகை நட்டுக்களுடன் நடமாடும் நகைக் கடை போல ஒரு டெர்ரராக காட்சி தந்தார் அவர். கையில் பெரிய சைஸ் வளையம், விரலில் பெரிய சைஸ் மோதிரம், கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலிகள், பெரிய மீன பார்க்கவே பயங்கரமா காட்சி அளித்தார். கம்யூனிஸ்டுகள் என்றாலே எளிமை, அமைதி, அடக்கம் என்பார்கள். ஆனால் இந்த பிரமுகர் பீம்ராவுக்கு அருகில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டபோது வேட்பாளரை விட்டு விட்டு இவரைத்தான் பலரும் வேடிக்கை பார்த்தனர். கம்யூனிஸ்டுகளின் பிரசார வரலாற்றிலேயே முதல் முறையாக என்று கூறும் அளவுக்கு இப்படி ஒரு நபர் வந்தது இதுவே முதல் முறையாகும். கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்குப் பக்கத்தில் இப்படி ஒரு "தோரணை" தேவையா என்று சிலர் முகம் சுளிக்கவும் செய்தனர்.
May 2, 2016
கம்யூ. வேட்பாளருக்கு ஓட்டு கேட்டுப் போகும்போது அடக்க ஒடுக்கமாக போகப்படாதா சார்??

Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 02, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 02, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.