Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 8, 2016

நர்ஸ் படித்து வரும் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலன்



கேரளாவில் நர்சுக்கு படித்து வரும் மாணவியை, தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் காதலன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''வர்கலாவில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி., நர்சிங் படித்து வரும் மாணவி தனது காதலன் கே. ஷைஜூவுடன் கொல்லம் சென்றுவிட்டு ஆட்டோவில் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது இடையில் ஷைஜூவின் நண்பர்கள் ஆட்டோவில் ஏறிக் கொண்டனர். அந்த ஆட்டோவில் வைத்து தனது நண்பர்களுடன் அந்தப் பெண்ணை காதலனே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

வர்கலா அருகில் உள்ள அயந்தி இடத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பெண் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆட்டோவில் கிடந்ததைப் பார்த்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

அந்தப் பெண்ணின் நண்பர்தான் ஆட்டோ டிரைவர் என்பதும், அவர்தான் ஷைஜு என்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

கடந்த மாதம் 28ஆம் தேதி சட்டம் படித்த தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த சம்பவமும் கேரளாவில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.