தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள மறுத்த கணவனை அமெரிக்காவில் கரோலினாவைச் சேர்ந்த பெண் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த சம்பவம் வடக்கு கொலம்பியாவில் உள்ள ராக் ஹில் என்ற பகுதியில் நடந்து இருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
51 வயதான சோண்ட்ரா இயர்லே கெல்லியின் கணவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்தார். தன்னுடன் ''படுக்கை அறைக்கு வந்து தன்னுடன்'' படுக்குமாறு கணவனிடம் கூறியுள்ளார். அதற்கு கணவர் மறுக்கவே அவரை வாய் வார்த்தைகளால் திட்டி, கைக்கு கிடைத்ததை எடுத்து அவர் மீது வீசியுள்ளார். இதில் அவரது கணவருக்கு பலத்த அடிபட்டு இறந்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்த பின்னர் , எப்படி தனது கணவர் இறந்தார் என்பது கெல்லிக்கு தெரியவில்லை. இதற்குக் காரணம் அவர் அப்போது செக்ஸ் உணர்வைத் தூண்டும் மருந்தை சாப்பிட்டு போதையில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் கணவரை தாக்கியது அவருக்கு தெரியவில்லை என்று போலீசார் நடத்திய விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
கெல்லியின் வயிற்றிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பெண் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.