May 22, 2016
உங்க வீட்டில் கல்யாண வயதில் பெண் இருக்கிறாளா?
அவன் பள்ளிப் படிப்பை முடித்ததும், வட மாநிலத்தில் உள்ள பெரு நகரம் ஒன்றிற்கு வேலை தேடி சென்றான். தனியாக அங்கே சென்ற அவன் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் மெல்ல மெல்ல முன்னேறினான். சுய தொழில் தொடங்கி ஓரளவு சம்பாதித்து, வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொண்டான்.
நாகரிகம் நிறைந்த அந்த பெருநகரத்தில் வசிக்கும் மகன், அங்கேயே ஏதாவது பெண்ணை காதலித்து திருமணம் செய்துவிடுவானோ என்ற கவலை அவனது கிராமத்து பெற்றோருக்கு ஏற்பட்டது. அதனால் ‘நாங்கள் கிராமத்திலே உனக்கு பெண் தேடுகிறோம். நீ இங்குள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும். இங்குள்ள பெண்தான் ஒழுங்காக வாழ்க்கை நடத்துவாள். உன் விருப்பத்திற்கு தக்கபடி நடந்துகொள்வாள்..’ என்று மகனிடம் ஆசைகாட்டினார்கள்.
முதலில் அவன் திருமண விஷயத்தில் பெற்றோருக்கு பிடி கொடுக்கவில்லை. தனக்கு வாழ்க்கையில் சில லட்சியங்கள் இருப்பதாகவும் அவை நிறைவேறிய பின்புதான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் கூறிக்கொண்டிருந்தான்.
அவனுக்கு வயது 30–ஐ நெருங்கிவிட்டது. ஊரில் இருந்து பெற்றோரும், பெருநகரத்தில் இருந்து நண்பர்களும் ‘சீக்கிரம் திருமணம் செய்துகொள்’ என்று நெருக்கடி கொடுக்க, ஒருவழியாக திருமணத்திற்கு சம்மதித்தான்.
‘பையனுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது. அவனது நண்பர்கள் ஒன்று சேர்ந்து அந்த மாநிலத்திலே பெண் பார்த்து திருமணம் செய்துவைத்துவிட்டால், அவன் அங்கேயே இருந்துவிடுவான். நமக்கும்– அவனுக்கும் இடையே உள்ள உறவு அறுந்துபோகும். அதனால் நாம் வேகவேகமாக நம்ம கிராமத்திலே ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்துவைத்துவிடவேண்டும்’ என்று பெற்றோர் வேகமாக செயல்பட்டார்கள்.
அழகான பெண் கிடைத்தாள். கல்யாணமும் நடந்தது. பத்து நாட்களில் தான் தொழில் நடத்தும் வட மாநிலத்துக்கு மனைவியை அழைத்துச்சென்றான்.
அடுத்த ஒரு மாதத்தில் தன் தாய் வீட்டில் கொண்டு வந்து புதுப்பெண்ணை விட்டுவிட்டு ‘சரிப்படுத்தி அனுப்புங்க’ என்று கூறிவிட்டு, தனியாக கிளம்பிப்போய்விட்டான்.
விஷயத்தை கேள்விப்பட்டு மாமியார் வீட்டினர் பதறிக்கொண்டு, மருமகனுக்கு போன் போட்டார்கள்.
‘‘கிராமத்து பெண் விவரமாக நடந்துப்பான்னு நான் நினைச்சேன். தினமும் லேட்டாக எழுந்திருக்கிறாள். வெந்ததும் வேகாததுமா எதையோ காலைக்கு மட்டும் சமைத்து தர்றாள். முழு நேரமும் டி.வி.பார்க்கிறாள். மீதி நேரங்களில் தூங்கிக்கொண்டே இருக்கிறாள். எப்போதும் ஓட்டலில் சாப்பிட விரும்புகிறாள். இரவில் பெரும்பாலான நேரம் வாட்ஸ் அப்பில் துழாவுகிறாள். இப்படியே போனால் என்னை மாதிரி உழைக்கிறவன் எப்படி உருப்படுவான்? கிராமத்து பொண்ணுக்கு வேகமும், விவேகமும் இருக்கும்னு நினைச்சுதான் முன்னே பின்னே யோசிக்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் நினைச்சதெல்லாம் தப்பா போச்சு! ஒரு மாதம் டைம் தர்றேன்! ஒழுங்கா குடும்பத்தை கவனிச்சுக்கிற மாதிரி அவளை சரிபண்ணி அனுப்புங்க..’’ என்றார்!
உங்க வீட்டில் கல்யாண வயதில் பெண் இருக்கிறாளா?
Reviewed by மறத்தமிழன்
on
May 22, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.