May 31, 2016
ஜெயலலிதா தலையிட்டு எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்: பிரபல நடன இயக்குனர்
முதலமைச்சர் ஜெயலலிதா எங்கள் குடும்ப விவாகரத்தில் தலையிட்டு, அதனை தீர்த்து வைக்க வேண்டும் என நடன இயக்குனர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பிரபல நடன இயக்குனரான சிவசங்கர் மீது அவரது மூத்த மருமகள் ஜோதி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிவசங்கள் இதுகுறித்து கூறியுள்ளதாவது, எனது மகன் விஜய் கிருஷ்ணாவுக்கும்- ஜோதிக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்ததால், இருவரையும் தனிக்குடித்தனம் அனுப்பிவைத்தோம், ஆனால், சேர்ந்து வாழ பிடிக்கவில்லையென்று எனது மகன் எங்களோடு வசித்துவருகிறான்.
மருமகளும் அவளது வீட்டிற்கு சென்றுவிட்டார்,இந்நிலையில் அவர் எங்கள் குடும்பத்தின் மீது வரதட்சணை புகார் கொடுத்துள்ளார், நான் வரதட்சணை கேட்கவில்லை.
தற்போது திடீரென ஜோதி எனது வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்கிறார். இவரின் பொய் புகார்கள் காரணமாக நாங்கள் குடும்பத்துடன் சில நாட்கள் தலைமறைவாக இருக்க வேண்டியதாயிற்று.
எனது மகன் ஜோதியுடன் சேர்ந்து வாழத் தயாராக இருக்கிறான். ஆனால் ஜோதியும் அவரது குடும்பத்தாரும் எங்களிடமிருந்து 10 கோடி பணமும், எங்களின் சொந்த வீட்டையும் கேட்டு மிரட்டுகிறார்கள்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு எங்களைக் காப்பாற்ற வேண்டும். இல்லை என்றால் குடும்பத்தோடு நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்
ஜெயலலிதா தலையிட்டு எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்: பிரபல நடன இயக்குனர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.