Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 19, 2016

மக்கள் நலக் கூட்டணி இதுவரை ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை


 
சென்னை: மாற்று அரசியலுக்கான முயற்சி என்று வர்ணிக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, இந்தத் தேர்தலில் இதுவரை ஒரு இடத்தில் கூட முன்னணியில் இல்லை.பெரும் எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் தேர்தல் களத்தைச் சந்தித்தது மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக - தமாகா இணைந்த கூட்டணி. வைகோவின் ஒருங்கிணைப்பில் உருவான இந்தக் கூட்டணி, அதிமுக, திமுக இரு கட்சிகளுக்குமே ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்தது

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் இணைந்த மக்கள் நலக் கூட்டணியாக இருந்த வரை, மதிப்பு மிக்க அணியாகத் திகழ்ந்தது. விஜயகாந்தின் தேமுதிக உள்ளே வந்தது கூட பிரச்சினையில்லை. ஆனால் விஜயகாந்தை கூட்டணித் தலைவராகவும் முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்ததுமே அந்தக் கூட்டணி மீதிருந்து மரியாதை கலகலக்க ஆரம்பித்துவிட்டது.இன்னொரு பக்கம் தேர்தல் பிரச்சாரக் களத்தில் ஜொலித்திருக்க வேண்டிய மநகூ தலைவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்கள்.இப்போது தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படும் நிலையில், 162 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இவற்றில் ஒரு தொகுதியில் கூட மக்கள் நலக் கூட்டணி முன்னணியில் இல்லை.நாம் தமிழர் கட்சி, பாமக, பாஜக போன்றவையும் எந்தத் தொகுதியிலும் முன்னணியில் இல்லை

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.