Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 22, 2016

காமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா?


சில விசயங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். சில விசயங்கள் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். செக்ஸ்சும் அப்படித்தான். படிக்கவும், பார்க்கவும், சுவாரஸ்யமான விசயங்களை செயல்முறைப்படுத்திப்  பார்க்கவேண்டும்  என்று  ஆரம்பித்தால்  சிக்கலில்  கொண்டுபோய்  விடும் என்கின்றனர் நிபுணர்கள்.
வாத்ஸ்சாயனார்   எழுதியுள்ள காமசூத்ரத்தில்   64 முறைகளை எழுதியுள்ளார். 8 தொகுதிகளில் எட்டெட்டு முறைகளை மொத்தம் 64 பொசிஷன்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பொஸிசன்கள் பார்த்தும், படித்தும்   ரசிக்கவும் மட்டும்தான்.
இவற்றை  பின்பற்றிப்பார்க்கலாம்  என்று முயற்சி  செய்தால்   பின்னர் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்.
இல்லையெனில் வலியும்  வேதனையும் ஏற்பட்டு தாம்பத்ய உறவின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தாம்பத்ய உறவின் மூலம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக காமசூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்களில் உடலை சங்கமிக்கச் செய்யலாம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
இவை தம்பதியரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு கொண்டுவரும். அதேபோல் கஜூராகோ சிற்பங்களை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டு அது செக்ஸ் உறவை உண்டுபண்ணும் என்கின்றனர் நிபுணர்.
அதை விடுத்து சிலைகளைப் போல ஈடுபட்டால் வலிதான் மிஞ்சும். செக்ஸ் உறவின் மூலம் உச்சகட்ட நிலையில் கண்களின் ஒரம் ஆனந்த கண்ணீரைத்தான் வரவைக்கவேண்டுமே தவிர வலிநிறைந்த வேதனையை ஏற்படுத்தக்கூடாது.
மயிலிறகால் வருடியதைப்போன்ற சுகத்தை தேடுவதுதான் பெண்மையின் எதிர்பார்ப்பு. அவர்களுக்கு ஏற்றார்போல செயல்பாட்டாலே அள்ள அள்ள குறையாத சுகம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே இயல்பான நிலையில் உறவில் ஈடுபட்டு இன்பமாக வாழுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.