தேர்தல் நேரத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிப்பட்டாலோ சில நேரங்களில் சில நடிகர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அவர்களது ஆதரவு அரசியல் மாற்றத்திற்கே வழிவகுத்துள்ளது.
அதன்படி, அதிமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கும், திமுக - த.மா.கா கூட்டணி வெற்றிக்கும் ரஜினிகாந்தின் வெளிப்படை ஆதரவு காரணமாக இருக்க, கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வீழ்வதற்கும் விஜயின் வெளிப்படையான அதிமுக-வுக்கான ஆதரவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு விஜய் மற்றும் அவரது திரைப்படங்களுக்கு ஆளும் கட்சியினால் ஏற்பட்ட தடைகளால் கடுப்பான விஜய் தரப்பு தற்போது அதிமுக-வுக்கு எதிராக களம் இறங்கப்போவதாக, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தகவல் கசிந்தது.
தற்போது அந்த தகவலை உண்மையாக்கும் விதத்தில் விஜய் ரசிகர்களின் அலை திமுக-பக்கம் வீசத்தொடங்கியுள்ளது.
கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவர் தங்கியுள்ள ஒட்டலில், கோவை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்ததுடன், கொங்கு மண்டலத்தில் தி.மு.க வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், சென்னையில் உள்ள விஜய் ரசிகர் தலைமை மன்றத்தில் இருந்து, அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும், திமுக-வுக்கு ஆதரவாக தேர்தல் வேலைகளில் ஈடுபடும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த வாரம் ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியன் முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் அதிமுக-வில் இணைந்ததோடு, அதிமுக-வின் வெற்றிக்காக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.
தல - தளபதி என்று சமூக வலைதளங்களில் போட்டிபோட்டுக் கொண்டிருந்த விஜய் - அஜித் ரசிகர்கள் தற்போது தேர்தல் களத்திலும் இறங்கியுள்ளதால், கோடம்பாக்கத்தில் தேர்தல் அனல் வீசத்தொடங்கியுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.