புதிது புதிதாய் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் வேகமும் எனக்கு எப்போதும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் சன்னியாசி வாழ்க்கையையே மேற்கொண்டுள்ளேன் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது –
‘‘நான் இன்று இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்துள்ளேன். நான் பயணிக்க விலை உயர்ந்த கார்கள் உள்ளன. வெளியூர்களுக்கு சென்றால் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்கள், ஆடம்பரமான மாளிகைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் எல்லாம் எனது மனம் ஈடுபாடு காட்டுவது இல்லை. எல்லாம் இருந்தும் சன்னியாசி நிலையிலேயே இருக்கிறேன். எனக்கு சொந்தமாக எந்த ஆசையும் கிடையாது. எனக்கு என்று எதையும் வாங்கவும் மாட்டேன். ஒரே ‘பேன்ட்’டில் ஒரு வாரம் கூட இருப்பேன். என் குழந்தைகள் ஆசைப்பட்டதை வாங்கி கொடுப்பேன்.
பெரிய நடிகர், தயாரிப்பு கம்பெனியின் முதலாளி, ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர், ஸ்டூடியோ அதிபர், வெளிநாட்டு தொழில்களில் பங்குதாரர் என்றெல்லாம் இப்போது இருந்தாலும், எனது சிறு வயது வாழ்க்கையை இன்னும் மறக்கவில்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்து, டெல்லியில் இருந்து பெற்றோரை பிரிந்து கையில் காசு இல்லாமல் மும்பை வந்த அந்த நாட்களை இன்னும் நான் மறக்கவில்லை.
எல்லோரும் இப்போது இருப்பதுபோல் கடைசி வரை இருப்பது இல்லை. எப்படி இருந்தாலும் புதிது புதிதாய் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் வேகமும் எனக்கு உண்டு. அதனால்தான் நிறைய தொழில்களில் ஈடுபடுகிறேன்.’’
- இவ்வாறு ஷாருக்கான் கூறினார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.