'கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழன்' என்று நாம் மார்தட்டி வந்தாலும், மனித இனம் ஆப்பிரிக்காவில் தான் தோன்றி இருக்க
வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கற்கள் சம்பந்தப்பட்ட ஆயுதங்களையும், சாதனங்களையும் உபயோகித்து வந்ததால்
'கற்கால மனிதர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள்.
ஆதி மனிதன்; அத்தகைய ஐஸ் யுக காலத்தில் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் முன்னோடியான ஆஸ்ட்ரோபிதிகஸ் வாழ்ந்து வந்தனர்.இவர்களில் இரு வகையினர் இருந்தனர்.
ஒரு வகையினர் 4 அடி உயரமும் 45-54 கிலோ கிராம் எடையும் கொண்டிருந்தனர். இவர்களில் மற்றொரு வகையினர் 5 அடி உயரமும் 54-68 கிலோ கிராமும் எடை கொண்டிருந்தனர்.இவர்களில்
சிறிய உருவத்தினர் 20 லட்சம் ஆண்டுகளில் மனிதர்களாக உருவெடுத்ததாக நம்பப்படுகின்றது. பெரிய உருவத்தினர் கொரில்லா குரங்குகளாக உருவெடுத்து தாக்கு பிடிக்கத் தெரியாததால் ஒழிந்து
வரும் இனமாக உள்ளது.
கூட்டு வாழ்க்கை; கற்கால மனிதர்கள் பெரும்பாலும் 25-50 நபர்கள் அடங்கிய தனித்தனி கூட்டங்களாக வாழ்ந்து வந்தனர். அன்றைய காலத்தில் ஒவ்வொரு கண்டத்திலும் சில ஆயிரம் மக்களே
இருந்தனர். இதனால் அன்றைய காலக்கட்டத்தில் தனி மனிதன் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் 25-50 நபர்களை மட்டுமே நேரில் சந்திக்க நேர்ந்தது.
வேட்டையாடுதல்; வேட்டையாடுதல் ஒன்றே ஆதிமனிதனின் வேலையாக இருந்தது. சிறிய மிருகங்கள் முதல் யானை போன்ற பெரிய மிருகங்களையும் 4-20 கொண்ட குழுவாக சென்று
வேட்டையாடி வந்தனர்.
உணவு முறை; சிங்கம், புலி, கரடி ஆகியவை மற்ற விலங்குகளைச் சண்டைப் போட்டு கொன்று சாப்பிடுவதைக் கண்ட ஆதிமனிதர்கள் வேட்டையாடி பிடித்த சாகடித்த விலங்குகளின் தசைகளை
பச்சையாக சுமார் 5 லட்சம் ஆண்டுகளாக சாப்பிட்டு வந்தனர். காளை, ஆடு, மான், குரங்கு, ஆகியவை சில இலை, காய் கனிகளையும் சாப்பிடுவதைப் பார்த்த மனிதர்கள் அவற்றில் தனக்குப் பிடித்தவற்றை
பறித்து சாப்பிட்டு வந்தனர். ஆறு, குளம், கடல் ஆகியவற்றில் கொக்குகள், மீன்களைப் பிடித்து சாப்பிடுவதைக் கண்ட அவர்கள் மீன்களையும் கைகளால் பிடித்து உண்ணத் துவங்கினர்.
உடைகள்;'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்!'. அரை மனிதனான கற்கால மனிதன் எப்போது ஆடைகளை அணிந்து மனிதனானான் என்பதற்க்குத் தகுந்த சான்று என்றும், எங்கும் இல்லை.
ஆப்பிரிக்கா, ஆசியா, தென் ஆப்ரிக்கா தட்ப வெப்ப நிலை வெதுவெதுப்பாகவே இருந்ததினால் அவர்களுக்கு உடையைப் பற்றிய உணர்வே எழவில்லை. ஐரோப்பா போன்ற குளிர் பிரதேசங்களை பல காலம் தவிர்த்தே வந்தனர். குளிர்காலங்களில் குளிர் பிரதேசங்களுக்கு உணவை தேடி அவர்கள் பிரவேசம் செய்வது கட்டாயமானபோது உடையின் அவசியத்தை உணர்ந்தனர். ஆடு, மாடுகள் கடுங்குளிரிலும் அலைவதைக் கண்டு, கொன்ற ஆடு, மாடுகளின் தோலை காய வைத்து அப்படியே உடுத்தலானார்கள்.பறவைகள் இறகுகளால் உடலை சூடாக வைத்துக் கொள்வதைக் கண்ட அவர்கள் இலை சருகுகளால் தங்கள்
இடுப்பையும் மார்பையும் மூடிக்கொண்டனர்.
உறைவிடங்கள்;பெரும்பாலும் கற்கால மனிதர்கள் ஓரினத்தில் தங்காமல், இரையைத் தேடி நகர்ந்து கொண்டே நாடோடியாக வாழ்ந்த காரணத்தால் வசிக்க வீடு என்பது அவசியம் இல்லாமல் போயிற்று. மாமிசமும் , தாவர உணவும் அதிகம் கிடைத்த இடங்களில் மட்டும் அவை தீரும்வரை தங்கத் தொடங்கினர். மரங்களின் மேல் வாழ்ந்த அவர்கள், மரக்கிளைகளை ஒடித்து இலைகளையும் தோல்களையும் பரப்பி கூடாரம் போல் அமைத்து உள்ளே உறங்கத் தொடங்கினர். இயற்கை சீற்றம் இருந்த போது மட்டும் குகைகளின் உள்ளே ஒதுங்கிக் கொண்டனர். மற்ற நேரங்களில் குகைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருந்ததால் அவற்றில் நாட்டம் கொள்ளவில்லை.விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகே நிரந்தர வீடுகளை அமைக்களாம்.
கற்கால மனிதன்;
தெய்வ வழிபாடு;கடவுள் நம்பிக்கை என்பது 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது. இறந்தவர்களை முறையாக புதைக்க துவங்கியது இந்த கால
கட்டத்தில் தான். இறப்புக்குப் பின்னும் வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கை தோன்றலின் பிரதிபலிப்பே அந்த சமாதிகள். அடர்ந்த மழை, புயல், காற்று, இடி, மின்னல், வெள்ளம் ஆகிய இயற்கையின்
சீற்றங்கள் தெய்வங்களின் கோபங்களாக நம்பப்பட்டதால் கூட்டு பிரார்த்தனைகள் பிறந்து வழிபட்டு தலங்களுக்கு வழிவகுக்கப்பட்டன.ப


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.