தன்னுடைய ஆட்சியில் அதிமுக ஏழை மக்களுக்கு ஆடு கொடுத்த கதையை குறும்படமாக எடுத்து ஒளி பரப்பி வருகிறது . அதில் அந்த ஏழை தாயாக நடித்து இருப்பவர் வெண்ணிலா கபாடி குழு படத்தில் கதா நாயகனின் அம்மாவாக நடித்தவர் . நல்ல கதா பாத்திர தேர்வு , இயல்பாகவே அந்த அம்மா முகத்தில் ஒரு சோகம் அப்பி இருக்கும் . எனவே இலவச ஆடு வாங்கி பிழைத்த ஒரு ஏழை குடும்ப தலைவியாக அவரை எந்த உறுத்தலும் இன்றி நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது … ஆனால் உண்மையாகவே ஆடு வாங்கி கொண்டவர்கள் நிச்சயமாக இவரை விட ஏழையாக தானே இருப்பார்கள் . . அவர்களை வைத்தே பதிவு செய்திருந்தால் இந்த குறும்படம் இன்னும் உண்மைத்தன்மை உள்ள தாக தானே இருந்திருக்கும் … ஏன் அந்த பயனாளர்களை இதில் பயன்படுத்தவில்லை ? இங்கே தான் இருக்கிறது அரசின் இலவச திட்டங்களின் லட்சணங்கள் …
நீங்கள் கண்ணில் விளக்கெண்ணை விட்டு தேடினாலும் அப்படி ஒரு நபரை தமிழ் நாட்டில் கண்டு பிடிப்பது அரிது . காரணம் …. உண்மையாகவே கஷ்டப்படுபவர்களுக்கு அந்த திட்டம் சென்று சேர்ந்திருக்காது . கட்சி காரர்களும் அவர்களின் அடிவருடிகளும் ஆளுக்கு கொஞ்சமாய் பிரித்து கொண்டிருப்பார்கள். அவர்கள் இந்த ஆட்டையோ மாட்டையோ நம்பி இருக்க மாட்டார்கள் . எனவே அவர்கள் வாங்கிய ஆடு மாடுகள் அது போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்திருக்கும் .
ஒருவேளை சில ஏழை பாழைகளுக்கு இவர்கள் ஆடோ மாடோ கொடுத்திருந்தாலும் அவர்கள் அதை வைத்து சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த வளர்ச்சியும் அடைந்திருக்க மாட்டார்கள்.எனவே இவர்கள் எதிர் பார்க்கிற மாதிரி அவர்கள் சந்தோசமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இல்லை எனவேதான் இவர்களுக்கு இவர்களின் திட்டத்தை சொல்ல வைக்க நடிகர்களின் உதவி தேவைப்படுகிறது எப்போது இவர்கள் அந்த பயனாளர் களை வைத்தே அந்த திட்டங்களின் பயனை பேச வைக்கிறார்களோ அப்போதுதான் இவர்களின் இலவச திட்டங்கள் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது என்று பொருள் …………….அதுவரை நீங்கள் உங்களுக்காக தீட்டிய திட்டத்தை எங்களுக்கு என்று காட்டி ஏமாற்ற முயற்சிக்காதீர்கள் …
செந்தில்குமார், ஊடகவியலாளர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.