Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 8, 2016

செயற்கை ஆணுறுப்பு அணிந்து பெண்களுடன் செக்ஸ்: பெண்ணுக்கு சிறை



ரப்பர் ஆண் உறுப்பை பயன்படுத்தி பல இளம்பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட பெண்ணுக்கு 39 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 

பிரிட்டனில் உள்ளது பிரிஸ்டன் நகரம். இங்குள்ள நீதிமன்றத்திற்கு வினோதமான ஒரு வழக்கு வந்தது. அதாவது 23 வயது ஜெனிபர் ஸ்டைன்ஸ் ஆண் போன்ற செயற்கை ஆண் உறுப்பு அணிந்து 16 முதல் 17வயதில் பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டுள்ளார். அந்தப் பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்போது காண்டம் பயன்படுத்தி வந்துள்ளார். இத்துடன் அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும்போது அறுவெறுப்பான புகைப்படங்களையும் எடுத்துள்ளார். 

இந்த விஷயம் போலீசாருக்கு தெரிய வர அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு பிரிஸ்டல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாரி காட்டார் கூறுகையில், ''கவனமாக செயல்பட்டு ஏமாற்றி இளம் பெண்களை ஏமாற்றி இருக்கிறீர்கள். இதை காதல் என்றோ, காதலுக்கான செக்ஸ் என்றோ, செக்சுக்காக மட்டுமா என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் ஜெனிபருக்கு 39 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது'' என்றார். 

கடந்தாண்டும் இதேபோல், தன்னுடைய பெண் நண்பருடன் உறவு வைத்துக் கொள்ள ஆண் போல செயற்கையாக உறுப்பை மாற்றி ஏமாற்றிய பெண்ணுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.