மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தலைவரின் மிரட்டல் பேச்சு
மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி ஆட்சி அமைத்ததற்கு பின் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மேற்கு வங்கத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும் என்றும் மத்திய அரசு மம்தா பேனர்ஜி அரசுக்கு ஒத்துழைக்கும் என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுதே மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் திலிப் கோஷ் வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார். திரினாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு மிரட்டல் விடுத்த அவர் அக்கட்சி தலைவர்களை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.
சனிக்கிழமையன்று ஒரு பேரணியில் பேசிய திலிப் கோஷ், நடந்து முடிந்த தேர்தலில் தங்கள் கட்சி வெறும் மூன்று இடங்களை மட்டுமே ஜெயித்திருந்தாலும் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடினமாக சவால்களை தங்களால் கொடுக்க முடியும் என்று
கூறியுள்ளார்.
தேவைபட்டால் திரினாமுல் காங்கிரஸ் கட்சியினரை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொல்ல மேற்கு வாங்க பா.ஜ.க வினரால் முடியும் என்றும் திரினாமுல் காங்கிரஸ் கட்யினர் தங்களால் முடிந்ததை பார்துகொள்ளட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் எந்த எல்லை வரையும் செல்ல முடியும் என்று கூறிய அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தங்கள் வெறும் கைகளாலேயே திரினாமுல் காங்கிரஸ் கட்சியினரின் கழுத்தை உடைக்கும் வல்லமை பெற்றவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது “நாங்கள் மூன்று இடங்களில் தான் ஜெயித்துள்ளோம், ஆனால் உங்களுக்கு சவால்விட இதுவே போதும். உங்களுக்டைய மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து உங்கள் வீடுகளில் வைத்தே உங்களை அடித்து கொன்றுவிடுவோம். அவர்களால் (திரினாமுல் காங்கிரஸ் கட்சியினரால்) என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம். ஆர்.எஸ்.எஸ். இன் பயிற்சி வெறும் கைகளாலேயே கழுத்தை உடைக்கும் சக்தியை கொடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் குஜராத் அயோத்தி நொய்டா போன்ற இடங்களில் பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் ஆயுதப்பயிற்சி எடுத்து வருவது கவனிக்கத்தக்கது .

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.