உறவுகளை வளப்படுத்த பாரத்மேட்ரிமோனி புது ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆப் மூலம் தம்பதிகள் வாழ்க்கை பயணத்தின் முக்கிய நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத்மேட்ரிமோனியின் இந்த 'டூகெதர்' ஆப், தம்பதிகளின் இன்பமான நிகழ்வுகளை பகிரவும், இருவருக்குமிடையேயான தடங்கல்களை தீர்க்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பகிரப்படும், குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் முற்றிலுமாக பாதுகாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வாழ்நாள் பயணங்களின் முக்கிய தருணங்களை குறிக்கும் ஒரு நினைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்பதிகளுக்கு இடையே ஆரோக்கியமான உறவை வலுப்படுத்த அவர்களது இன்பமான நினைவுகளை பகிர இந்த 'டூகெதர்' ஆப் உதவும். இதனை மேட்ரிமோனி தினமான ஏப்ரல் 14ஆம் அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி என மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல் ஜானகிராமன் கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவரது சிந்தனைகளை, காதலை பாதுகாப்புடன் பகிர்ந்து கொள்ள, முக்கிய தருணங்களின் கோப்பாக, 'டூகெதர்' ஆப் இருக்கும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.