உத்தரபிரதேசம் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்ட பஜ்ரங்தள் அமைப்பினர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பஜ்ரங்தள் அமைப்பினர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்தும், அவர்களை வேட்டையாடுவது போல் ஓர் பயிற்சி அளித்தனர். அதில் உண்மையான துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அந்த பயிற்சி அளிக்கப்பட்டது, இதுகுறித்து வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியானது. இதற்கு நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைக்க முயன்ற பஜ்ரங்தள் அமைப்பினர் 50 பேர் மீது பைசாபாத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்து சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது காவல் மற்றும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், பல்வேறு விளையாட்டு கலை பயிற்சியும் ஆயுதப்பயிற்சியை எடுத்துக்கொள்வது அவசியமானது என்றும் அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டு பயிற்சி முகாம், சுல்தான்பூர், கோரக்பூர், பிலிபட், நொய்டா பேட்பூர் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பஜ்ரங்தள் அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Thanks To: Thekathir



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.