Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 29, 2016

டாஸ்மாக். படையெடுக்கும் மக்கள்:....மூடுமாறு கோரிக்கை..


'
 
மூட போகும், 500 'டாஸ்மாக்' கடை பட்டியலில், எங்கள் பகுதியில் உள்ள கடையையும் சேர்க்க வேண்டும்' எனக் கோரி, தினமும் ஏராளமான மக்கள், டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர். இதனால், அதிகாரிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, முதற்கட்டமாக, 500
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில், மதுக்கடையை மூடுமாறு பலரும், கோரிக்கை மனுவை அளித்து வருகின்றனர்.


இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, குடியிருப்போர்நலச்சங்கம், தொண்டு நிறுவனம், இளைஞர்கள் சங்கம் உட்பட பலரும், 'மூட உள்ள, 500 கடைகள் பட்டியலில், எங்கள் பகுதியில் கடையையும் சேர்க்க வேண்டும்' எனக் கோரி மனு அளித்து வருகின்றனர். இதனால், மூட வேண்டிய கடைகளை தேர்வு செய்வது சிரமமாக உள்ளது. இம்மாத இறுதிக்குள், 500 கடைகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.