Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2016

செக்ஸ்க்கு வற்புறுத்திய இளைஞரின் நாக்கை கடித்து துப்பிய பெண்



தெற்கு பிரான்சில் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு பின் தொடர்ந்து வந்த இளைஞரின் நாக்கை பெண் கடித்து துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தெற்கு பிரான்சில் பர்பன் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது இவரை பின் தொடர்ந்த 24 வயது இளைஞர் லிப்ட்டுக்குள் ஏறும்போது வந்து தொந்திரவு கொடுத்துள்ளார். தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு அந்தப் பெண்ணை வலியுறுத்தி, அவரது மேல் ஆடையை பிடித்து இழுத்துள்ளார். மேலும், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். 

இதையடுத்து அந்தப் பெண்ணும் முத்தம் கொடுக்க அனுமதித்து, அந்த இளைஞனின் நாக்கைப் பிடித்துக் கடித்துள்ளார். இதில் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அந்த இளைஞர் ஓடி விட்டார். இதையடுத்து அந்த இடத்தில் இளைஞரின் நாக்கின் நுனிப் பகுதி விழுந்து கிடந்ததையும், ரத்தம் வடிந்து இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.