Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2016

செக்ஸுக்கு மறுப்பு: மனைவியைக் கொன்ற கணவர் கைது



ஆக்ரா: செக்ஸ் வைத்துக் கொள்ள மறுத்த மனைவியைக் கொன்ற கணவனை மதுரா போலீசார் கைது செய்தனர். 

மதுராவைச் சேர்ந்தவர் பிர்ஜு. 40 வயது,. இவரது மனைவி ஹீரா தேவி. கடந்த மே 18ஆம் தேதி முதல் ஹீரா தேவியை காணவில்லை என்று போலீசில் அவரது சகோதரி புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், முதல் மனைவி இறந்துவிட, இரண்டாவதாக ஹீரா தேவியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். 

இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனால், குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் தனது மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள பிர்ஜு அழைத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஹீராவைக் கொன்று அருகில் இருக்கும் தண்ணீர் இல்லாத கிணற்றில் வீசியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 

போலீசார் நடத்திய விசாரணைக்குப் பின்னர் கிணற்றில் இருந்து ஹீராவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.