Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2016

வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள் பாலியல் அடிமைகளாக்கப்படுகின்றனர் – ஆந்திர அமைச்சர் தகவல்



வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள் விலை வைத்து விற்கப்படுவதாக பல்லே ரகுநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பெண்கள் வீட்டு வேலைக்காக வளைகுடா நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது போன்று அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பலர் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக ஆந்திர அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி குற்றம் சாட்டி உள்ளார். மேலும் அங்கு பெண்கள் பாலியல் அடிமைகளாகவும் விற்பனை செய்யப்பட்டு கடும் சித்தரவதைகளை அனுபவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் 60 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளி விவரத் தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிற்கு குறைந்தது ரூ. 4 லட்சம் விலை வைக்கப்படுகிறது. பஹ்ஹைனில் ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் விலை நிர்ணயித்துள்ளதாகவும் இவர்களை தீவிரவாதிகளுக்கும் விற்பனை செய்வதாக அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன. இதுபோன்று வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு கடிதம் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.