யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இருந்து உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சடலம் இன்று (சனிக்கிழமை) மாலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள பனங்காணியொன்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் குறித்த பனங்காணிக்கு இளைஞன் ஒருவன் தனது கால்நடை ஒன்றை மேய்ப்பதற்காக சென்றுள்ளார்.
இதன் போதே ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு பயந்து கூச்சலிட்டவாறே ஒடிச்சென்று பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்கியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பொறுப்பெடுத்துக் கொண்டணர்
அத்துடன் சடலத்துக்கு அண்மையில் சாரம், செருப்புகள் என்பனவும் சிதறி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் மீட்கப்பட்ட சடலமானது இதுவரை யாருடையது என இனங்காணப்படவில்லை எனவும் இது கொலையாகவும் இருக்கலாம் எனவும் தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.